| 
         
          | 3406. | பாரிடம் பாணிசெய்யப் பறைக் கட்செறு |   
          |  | பல்கணப்பேய் சீரொடும் பாடலாட லில யஞ்சிதை
 யாதகொள்கைத்
 தாரிடும் போர்விடையன் றலைவன்றலை
 யேகலனா
 ஊரிடும் பிச்சைகொள்வா னுறை யும்மிட
 மொற்றியூரே.                       2
 |  
         
          | 3407. | விளிதரு நீருமண்ணும் விசும் போடனல் |   
          |  | காலுமாகி அளிதரு பேரருளா னர னாகிய
 வாதிமூர்த்தி
 |  
  சந்திரனைப் போன்ற, 
        வெண்சங்கத்தோடு, உடையவன். தங்கிய - உவமவாசகம். அடைந்தவர்க்கு ஊனம் இல்லையாகச் செய்பவன்.
       2. 
        பொ-ரை: பூதகணங்கள் பண்ணிசைத்துப் பாட, பறைகள் கொட்ட, கண்டாரைக் கொல்லவல்ல பல்வேறு பேய்க்கணங்கள் தாளத்தோடு இலயம்
 கெடாதவாறு பாடி ஆடத் திருநடனம் புரிபவன். கிண்கிணிமாலை அணிந்த
 போர்செய்யும் தன்மையுடைய இடப வாகனத்தில் வீற்றிருந்தருளும் தலைவன்.
 பிரமகபாலத்தை உண்கலனாகக் கொண்டு ஊர்தோறும் திரிந்து பிச்சை
 ஏற்பவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர்
 என்னும் திருத்தலம் ஆகும்.
       கு-ரை: 
        பாரிடம் - பூதம், பாணி செய்ய - பாட. பறைக்கண் - பறை போன்ற கண்பார்வையினாலேயே, செறு - கண்டாரைக் கொல்ல வல்ல.
 பல்கணப் பேய் - பல பேய்க்கூட்டங்களின், சீரொடும் - தாளவொத்தோடும்.
 இலயம் - ஒன்றுதல், சிதையாத கொள்கை - சிதையாத முறையோடு. பாடல்
 ஆடல் - பாடலுக்கேற்ற ஆடலையுடைய. விடையன். தார் -
 கிண்கிணிமாலை.
 
       3. 
        பொ-ரை: ஓசையுடன் பாயும் நீர், நிலம், ஆகாயம், நெருப்பு, காற்றுமாகி, மன்னுயிர்களைக் காக்கும் பெருங்கருணையாளன் ஆகிய
 சங்கார கர்த்தாவாகிய சிவபெருமானே உலகத்தோற்றத்திற்கும் நிமித்த
 |