3415. |
ஒண்பிறை மல்குசென்னி யிறை வன்னுறை |
|
யொற்றியூரைச்
சண்பையர் தந்தலைவன் றமிழ் ஞானசம்
பந்தன்சொன்ன
பண்புனை பாடல்பத்தும் பர விப்பணிந்
தேத்தவல்லார்
விண்புனை மேலுலகம் விருப் பெய்துவர்
வீடெளிதே. 11 |
திருச்சிற்றம்பலம்
கூறும் சொற்களைப்
பொருளெனக் கொள்ள வேண்டா. ஏழுலகும் மகிழுமாறு
ஆட்கொள்ள வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர்
என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
ஆகம செல்வனாரை - சிவபெருமானை, அலர்தூற்றுதல் -
பழித்துரைத்தல், கூகை - கோட்டான், மாக்கள் - ஐயறிவுடை
விலங்குகளோடொப்பவர். மாவும் புள்ளும் ஐயறி வினவே. (தொல்காப்பியம்,
576) ஓகை - மகிழ்ச்சி.
11.
பொ-ரை: ஒளிரும் பிறைச்சந்திரனைத் தலையில் சூடிய
இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவொற்றியூரை, சண்பை
என்று கூறப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ்
ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இப்பாடல்கள் பத்தையும் ஓதி
வழிபட வல்லவர்கள் விண்ணிலுள்ள சுவர்க்கலோத்தை அடைந்து வீடு
பேற்றை எளிதில் அடைவர்.
கு-ரை:
மல்கு - ஒளி விளங்குகின்ற, விண் - வானிலுள்ள,
புனையப்பட்ட, மேலுலகம் -சுவர்க்கலோகம், எய்துவர், அவர்கட்குப் பின்
வீடும் எளியது ஆகும்.
|