பதிக வரலாறு:
திருநள்ளாற்று
மருந்தை வணங்கி வழிபட்ட பாலறாவாயர் பிற
திருப்பதிகளைப் போற்றிச், செந்நெல் வயல் செங்கமல முகமலரும்
திருச்சாத்த மங்கை மூதூரில் எழுந்தருளி, நீதியால் நிகழ்கின்ற நீல
நக்கருடைய பெருஞ்சீர் நிகழவைத்துப் போற்றி செய்தது இத்
திருப்பதிகம்.
பண்: பஞ்சமம்
ப.தொ.எண்:319 |
|
பதிக
எண்: 58 |
திருச்சிற்றம்பலம்
3416. |
திருமலர்க் கொன்றைமாலை திளைக் கும்மதி |
|
சென்னிவைத்தீர்
இருமலர்க் கண்ணிதன்னோ டுட னாவது
மேற்பதொன்றே
பெருமலர்ச் சோலைமேக முரிஞ் சும்பெருஞ்
சாத்தமங்கை
அருமல ராதிமூர்த்தீ யய வந்தி
யமர்ந்தவனே. 1 |
1.
பொ-ரை: தெய்வத்தன்மை பொருந்திய கொன்றை மலர்களை
மாலையாக அணிந்தவனும், சந்திரனைத் தலையில் தரித்தவனும், இரு
தாமரை மலர் போன்ற கண்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு,
நறுமணம் பெருகும் மலர்கள் நிறைந்த சோலைகளிலுள்ள மரங்கள் மேகத்தை
உராயும்படி விளங்கும் திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில், உலகிற்கு
ஒப்பற்றவனாகி விளங்கும் ஆதிமூர்த்தியும் ஆகிய சிவபெருமான் அயவந்தி
என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார். இத்திருத்தலத்தின்
அம்பிகையின் திருப்பெயரான இருமலர்க்கண்ணம்மை என்பது இப்பாடலில்
உணர்த்தப்படுகின்றது.
கு-ரை:
கொன்றை மாலையில் திளைக்கும் மதி, கொன்றை
சிவபிரானுக்குரியதாந் தன்மையாலும், பிரணவபுட்பம் எனப்
|