| 3437. |
வெண்கொடி மாடமோங்கு விறல் வெங்குரு |
| |
நன்னகரான்
நண்பொடு நின்றசீரான் றமிழ்ஞானசம்
பந்தனல்ல
தண்குட மூக்கமர்ந்தா னடிசேர்தமிழ்
பத்தும்வல்லார்
விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர்
வீடெளிதே. 11 |
திருச்சிற்றம்பலம்
11.
பொ-ரை: வெண்கொடி அசைகின்ற மாடங்கள் ஓங்கி விளங்கும்
வெங்குரு எனப்படும் சீகாழியில் அனைவரிடத்தும் நட்புக் கொண்டு பழகும்
புகழ்மிக்க தமிழ் ஞானசம்பந்தன் நல்ல குளிர்ந்த திருக்குடமூக்கு என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவ பெருமானின் திருவடிகளைப்
போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வானிலுள்ள
சுவர்க்கலோகத்தை அடைந்து இன்புறுவர். அவர்கட்கு முக்திப்பேறு
எளிதாகக் கைகூடும்.
கு-ரை:
வெண்கொடி மாடம் ஓங்கும் - புகழின் அடையாளமாக
வெண்கொடி கட்டிய மாடம். வெங்குரு - சீர்காழி.
திருஞானசம்பந்தர்
புராணம்
திருஞான சம்பந்தர் திருக்குடமூக் கினைச்சேர
வருவார்தம் பெருமானை வண்டமிழின் திருப்பதிகம்
உருகாநின் றுளம்மகிழக் குடமூக்கை உவந்திருந்த
பெருமான்எம் இறைஎன்று பெருகிசையால் பரவினார்.
-சேக்கிழார். |
|