பக்கம் எண் :

798திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

கூரெரி யாகிநீண்ட குழ கன்குட
     மூக்கிடமா
ஈருரி கோவணத்தோ டிருந் தானவ
     னெம்மிறையே.                   9

3436. மூடிய சீவரத்தார் முது மட்டையர்
       மோட்டமணர்
நாடிய தேவரெல்லா நயந் தேத்திய
     நன்னலத்தான்
கூடிய குன்றமெல்லா முடை யான்குட
     மூக்கிடமா
ஏடலர் கொன்றைசூடி யிருந்தானவ
     னெம்மிறையே.                 10


முடியாமல் பெருக்கெடுத்த கங்கையைப் புன்சடைமேல் தாங்கி, இளம்பிறைச்
சந்திரனைச் சூடி, நல்ல நெருப்புப் பிழம்பு போல் ஓங்கி நின்ற
அழகனானசிவபெருமான், திருகுடமூக்கு என்னும் திருத்தலத்தில் தோலும்
கோவண ஆடையும் அணிந்து வீற்றிருந்தருளுகின்றான். அவனே யாம்
வணங்கும் கடவுள் ஆவான்.

     கு-ரை: ஆர் - பொருந்திய. எரி - அக்கினிபோல் ஒளிரும். ஆழி -
சக்கராயுதம். நீர் - கங்கைநீர். இரி - வழிந்தோடுகின்ற. கூர் எரி - மிக்க
நெருப்புப் பிழம்பு. ஈர் உரி - உரித்த தோல்.

     10. பொ-ரை: மஞ்சட் காவியுடையணிந்த, இறைவனை உணராத
பேதையராகிய புத்தர்களும், இறுமாப்புடைய சமணர்களும், கூறுவன
பயனற்றவை. தன்னை நாடித் தேவர்கள் எல்லாம் விரும்பி வழிபட,
அவர்கட்கு நல்லதையே அருளும் சிவபெருமான், மன்னுயிரைக்
குன்றவைக்கும் தீவினையால் வரும் குற்றங்களை நீக்கி அருள்புரிவான்.
திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் இதழ் விரிந்த கொன்றைமாலையைச்
சூடி வீற்றிருந்தருளும் அப் பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.

     கு-ரை: மூடிய சீவரத்தார் - சீவர ஆடையைப் போர்த்தவர்.
முதுமட்டையர் - மிக்க பேதையராகிய புத்தர். மோட்டு அமணர் -
இறுமாப்புடைய அமணர். ஏடு அலர் - இதழ்விரிந்த.