பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)59. திருக்குடமூக்கு797

3434. நெடுமுடி பத்துடைய நிகழ்வாளரக்
       கன்னுடலைப்
படுமிடர் கண்டயரப் பரு மால்வரைக்
     கீழடர்த்தான்
கொடுமட றங்குதெங்கு பழம் வீழ்குட
     மூக்கிடமா
இடுமண லெக்கர்சூழ விருந் தானவ
     னெம்மிறையே.               8

3435. ஆரெரி யாழியானு மல ரானும
       ளப்பரிய
நீரிரி புன்சடைமே னிரம் பாமதி
     சூடிநல்ல


புரங்களையும் சிதைத்தவன். கொத்தாகக் காய்க்கும் பலாக்கனிகள் தாமாகவே
கனிந்து வீழும் வளம் நிறைந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில்
இலைபோன்ற சூலப்படையை ஏந்தி வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம்
வணங்கும் கடவுளாவான்.

     கு-ரை: வையம் உய்ய மங்கைபாகம் மகிழ்ந்தான். உலகம் அவன் உரு
ஆகலான். உலகில் இல்லற தருமம் நடத்தற்கு அவன் அம்மையோடு
கூடியிருத்தலின் வையம் உய்ய மங்கை பாகம் மகிழ்ந்தான் என்றார்.
“பெண்பால் உகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர் விண்பாலி யோகெய்தி
வீடுவர்காண் சாழலோ” - என்ற திருவாசகத்தாலும் அறிக. இலைமலி சூலம்
- இலைவடிவத்தையுடைய சூலம்.

     8. பொ-ரை: நீண்ட முடிகள் பத்துடைய வாளுடைய இராவணனின்
உடலானது துன்பப்படுமாறு கயிலைமலையின் கீழ் அடர்த்த பெருமானாய்,
வளைந்த மடல்களையுடைய தென்னை மரங்களிலிருந்து முற்றிய காய்கள்
விழும் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் மணல் திட்டு சூழ
வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாம் வணங்கும் கடவுளாவான்.

     கு-ரை: இடர்கண்டு - துன்பப்பட்டு, அயர - தளர, அடர்த்தான்.
கொடு - வளைந்த, மணல் எக்கர் - மணல் திடல்.

     9. பொ-ரை: அக்கினிபோல் ஒளிரும் சக்கராயுதப் படையுடைய
திருமாலும், பிரமனும் அளக்கமுடியாதவனாய், கட்டுப்படுத்த