| 3444. |
கானண வும்மறிமா னொரு கையதோர் |
| |
கைமழுவாள்
தேனண வுங்குழலா ளுமை சேர்திரு
மேனியனான்
வானண வும்பொழில்சூழ் திரு வக்கரை
மேவியவன்
ஊனண வுந்தலையிற் பலி கொண்டுழ
லுத்தமனே. 7 |
| 3445. |
இலங்கையர் மன்னனாகி யெழில் பெற்ற |
| |
விராவணனைக்
கலங்கவொர் கால்விரலாற் கதிர் பொன்முடி
பத்தலற
நலங்கெழு சிந்தையனா யருள் பெற்றலு
நன்களித்த
வலங்கெழு மூவிலையே லுடை யானிடம்
வக்கரையே. 8 |
7.
பொ-ரை: காட்டில் உலவும் மானை ஒரு கையில் ஏந்தி,
மழுவாளை மற்றொரு கையிலேந்தியவன் சிவபெருமான். வண்டுகள்
மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு
பாகமாகக் கொண்டவன். வானளாவிய சோலைகள் சூழ்ந்த திருவக்கரை
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பிரமனின்
மண்டையோட்டை ஏந்திப் பிச்சை எடுத்துத் திரியும் உத்தமனாவான்.
கு-ரை:
கான் அணவும் - காட்டில் பொருந்திய. மறிமான் - மான்
கன்று. ஓர் கையது; ஓர் கை(யது) - மற்றொரு கையது (மழுவாள்.) தேன்
- வண்டு. அணவும் - பொருந்திய. வான் அணவும் - ஆகாயத்தை
யளாவிய பொழில்.
8.
பொ-ரை: இலங்கை மன்னனான அழகிய இராவணன் கலங்குமாறு,
சிவபெருமான் தன் காற்பெருவிரலை ஊன்றி, ஒளி வீசுகின்ற பொன்னாலான
திருமுடிகளணிந்த அவன் தலைகள் பத்தும் அலறுமாறு செய்தான். பின்
இராவணன் செருக்கு நீங்கி, நல்ல
|