| 3446. |
காமனை யீடழித்திட் டவன் காதலி |
| |
சென்றிரப்பச்
சேமமே யுன்றனக்கென்றருள் செய்தவன்
றேவர்பிரான்
சாமவெண் டாமரைமே லய னுந்தர
ணியளந்த
வாமன னும்மறியா வகை யானிடம்
வக்கரையே. 9 |
சிந்தனையோடு இறைவனைப்
போற்றிசைக்க, திருவருளால் இறைவன்
அவனுக்கு வீரவாளும், நீண்ட வாழ்நாளும் கொடுத்து அருள் புரிந்தான்.
அத்தகைய பெருமான் வலக்கையில் மூவிலைவேல் ஏந்தி வீற்றிருந்தருளும்
இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
ஓர் கால்விரலால், கதிர் பொன் முடி பத்து அலற, கால் ஐந்து
விரலிலும் ஒருவிரல் - அடர்த்ததோ முடி, அவையும் பத்து, முடியணிந்தது,
பொன் முடி - கதிர்விடும் பொன் என்ற நயம் காண்க. செருக்குற்ற தீய
சிந்தையனாகாது. செருக்கு ஒழிந்து நலங்கெழு சிந்தையனாகி. அருள்
பெற்றலும் - திருவருளுக்குப் பாத்திரமான அளவில், நன்கு - நல்லனவாகிய
வாளும், நாளும், அளித்த - அருள் புரிந்த - மூவிலை வேல் உடையவன்.
9.
பொ-ரை: மன்மதனுடைய அழகிய வலிய தேகத்தை எரித்துச்
சாம்பலாக்கிப் பின்னர் அவன் மனைவி இரதி இரந்து வேண்டிப்
பிரார்த்திக்கச் சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து அவள் கண்ணுக்கு
மட்டும் புலப்படும்படி அருள்புரிந்தான். வெண்டாமரையில் வீற்றிருந்து
சாமகானம் பாடுகின்ற பிரமனும், உலகையளந்த வாமனனான திருமாலும்
அறியாவண்ணம் நீண்ட சோதியாக நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
ஈடு அழித்திட்டு - வலிமைக்கு இடமாகிய உடம்பை அழித்து.
அவன் காதலி - இரதி. உன்தனக்குச் சேமமே - (உன் கண்ணுக்கு மட்டும்
புலப்படுவான் ஆகையினால்) உன்னைப் பொறுத்தவரையில் உனக்கு
நன்மையே. சாமம் - வேதம் பாடுகின்ற (வெண்தாமரைமேல்) அயனும். தரணி
- பூமி. அளந்த, வாமனனும் வாமனாவதாரம் கொண்ட திருமாலும்.
சிறப்புப்பெயர் பொதுப் பெயருக்கு ஆயிற்று.
|