பக்கம் எண் :

816திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3461. விரித்தவ னான்மறையை மிக்க விண்ணவர்
       வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் ளிய லேழுல
     கில்லுயிரும்
பிரித்தவன் செஞ்சடைமே னிறை பேரொலி
     வெள்ளந்தன்னைத்
தரித்தவ னூர்பனந்தாட் டிருத் தாடகை
     யீச்சரமே.                         2

3462. உடுத்தவன் மானுரிதோல் கழ லுள்கவல்
       லார்வினைகள்
கெடுத்தருள் செய்யவல்லான் கிளர் கீதமொர்
     நான்மறையான்


எரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ”
(திருவாசகம். 269). ‘திருத்தாடகையீச்சரம்’ திருக்கோயிலின் பெயர்.

     2. பொ-ரை: சிவபெருமான் நான்குவேதங்களின் பொருளை விரித்து
ஓதியவன். தேவர்களெல்லாம் வந்து வேண்ட முப்புரங்களை எரித்தவன்.
ஏழுலகங்களிலுமுள்ள உயிர்களைச் சங்கார காலத்தில் பிரித்தவன். சிவந்த
சடையின்மேல் நிறைந்த பேரொலியோடு பெருக்கெடுத்து வந்த கங்கையைத்
தாங்கியவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள்
என்னும் திருத்தலத்தில் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும்.

     கு-ரை: நான்மறையை - நான்கு வேதத்தின் பொருளையும். விரித்தவன்
- விரித்துரைத்தவன், வேதத்துக்குப் பொருளருளிச் செய்த திருவிளையாடல்
இங்குக் குறித்தது. இயல் - பொருந்திய, உலகில் உயிர், பிரித்தவன்,
ஆசாரியனாகவந்து, தத்துவ ரூபம், தத்துவ தரிசனம், தத்துவ நீக்கம் செய்து,
ஆன்மரூபம் முதலியன காட்டத் தொடங்கும். அவதாரத்தை உலகில் உயிர்
பிரித்தான் என்றருளிச் செய்தனர். வெள்ளம் - நீர்ப் பெருக்கம்.

     3. பொ-ரை: சிவபெருமான் மான்தோலை ஆடையாக அணிந்தவன்.
தன் திருவடிகளை நினைத்து வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவன்.
இனிய இசையுடைய நால்வேதங்களை