பதிக வரலாறு:
வெங்குருவேந்தர்
திருச்சேய்நல்லூரைப் பொங்கிய விருப்பொடு,
செங்கை குவித்து, வணங்கி வலங்கொண்டு போற்றியபின் திருப்பனந்தாளைச்
சேர்ந்து, வெண்பிறையணிந்த செவ்வேணிப் பிஞ்ஞகரை வழிபட்டுப்
பாடியருளியது இத்திருப்பதிகம்.
பண்: பஞ்சமம்
ப.தொ.எண்:320 |
|
பதிக
எண்: 62 |
திருச்சிற்றம்பலம்
3460. |
கண்பொலி நெற்றியினான் றிகழ் கையிலொர் |
|
வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை
மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை
வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாட் டிருத் தாடகை
ஈச்சரமே. 1 |
1.
பொ-ரை: சிவபெருமான் நெற்றிக்கண்ணையுடையவன். தூய
வெண்மழுவினைக் கையிலேந்தியவன். உமாதேவியைத் தன் திருமேனியில்
ஒரு பாகமாக உடையவன். மிக்க பெருமையுடைய திருமாலை இடப
வாகனமாகக் கொண்டவன். விண்ணிலே விளங்குகின்ற பிறைச்சந்திரனை
அணிந்த சிவந்த சடையினையுடைய, வேதங்களை அருளிச் செய்த
சிவபெருமானுடைய உறைவிடம் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த
திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும்
திருக்கோயிலாகும்.
கு-ரை:
கண் பொலிகின்ற நெற்றியினான், திகழ்கையில் - கையில்
விளங்கும். புணர் - ஒருபால் கலந்த. பீடு - பெருமித நடையையுடைய,
விடையன். ஏறுபோற் பீடுநடை. (குறள் - 59.) மால் விடை - திருமாலாகிய
இடபம். தடமதில்க ளவைமூன்றும் தழல்
|