|
அந்தண்பூங்
கலிக்காழி யடிகளையே
யடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர்
தக்கோரே. 11 |
திருச்சிற்றம்பலம்
வணங்கும் ஞானசம்பந்தன்
சந்தம் மிகுந்த திருத்தமிழில் அருளிய
இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் மனிதப்பிறவி எடுத்ததன் தகுதியைப்
பெற்றவராவர்.
கு-ரை:
அம் - அழகிய, தண்- குளிர்ந்த, பூ - பொலிவுற்ற. கலி -
ஒலிமிக்க (காழி). காழியடிகள் - திருத்தோணியப்பர்.
திருஞானசம்பந்தர்
புராணம்
சிறுத்தொண்ட
ருடன்கூடச் செங்காட்டங்
குடியில்எழுந் தருளிச் சீர்த்தி
நிறுத்தெண்டிக் கிலுநிலவுந் தொண்டரவர்
நண்பமர்ந்து நீல கண்டம்
பொறுத்தண்டர் உயக்கொண்டார் கணபதீச்
சரத்தின்கட் போகம் எல்லாம்
வெறுத்துண்டிப் பிச்சை நுகர் மெய்த்தொண்ட
ருடன்அணைந்தார் வேத கீதர்.
|
|
அங்கணைந்து கோயில்வலங் கொண்டருளி
அரவணிந்தார் அடிக்கீழ் வீழ்ந்து
செங்கண்அரு விகள்பொழியத் திருமுன்பு
பணிந்தெழுந்து செங்கை கூப்பித்
தங்கள் பெருந் தகையாரைச் சிறுத்தொண்டர்
தொழஇருந்த தன்மை போற்றிப்
பொங்கி எழும் இசைபாடிப் போற்றிசைத்தங்
கொருபரிசு புறம்பு போந்தார்.
-சேக்கிழார்.
|
|