| 
       
         
          |  | நம்பன்றன் 
            கழல்பரவி நவில்கின்ற மறைஞான
 சம்பந்தன் தமிழ்வல்லார்க் கருவினைநோய்
 சாராவே.                         11
 |   
        திருச்சிற்றம்பலம்
       
 வீற்றிருக்கும் சிவபெருமானின் 
        திருவடிகளைப் போற்றிஅருளிய வேதம்வல்ல ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓத வல்லவர்களை
 அருவினைகளும், அவற்றால் வரும் பிறவிநோயும் சாரா.
       கு-ரை: 
        பைம்பொன் - பசிய பொன்னையும். சீர் - சிறப்புப் பொருந்திய. மணி - இரத்தினங்களையும் (வாரி). சேர் - திரட்சியான. கனி பலவும் -
 கனிகள் பலவற்றையும். உந்தி - அடித்துக் கொண்டு வரும் (காவிரியில்).
 அம்பொன்செய் - அழகிய பொன் அணிகளால் (அலங்கரித்தலைச்) செய்த.
 மடவரலார் - நீராடும் மகளிரின். அணி - வரிசை. மல்கும் - மிகுந்த
 (பெருவேளூர் நம்பன்). செய் - பொதுவினை சிறப்பு வினைக்காயிற்று.
 (சிவபெருமானின்) கழல் - திருவடிகளை; துதித்து. நவில்கின்ற - பாடுகின்ற.
 மறை - வேதநூல்; வல்ல ஞானசம்பந்தன். தமிழ் வல்லார்க்கு வினையால்
 நேரும் நீக்குதற்கு அரிய துன்பங்கள் சாரமாட்டா. வினைநோய் - வினையால்
 வரும் நோய் என மூன்றன் உருபும் பயனும் தொக்க தொகை. உந்தி
 பெயர்ச்சொல் - உந்து + இ = இகரம் வினை முதற்பொருளில் வந்தது.
 
       
         
          | திருஞானசம்பந்தர் 
              புராணம்  நீடுதிரு 
              வாஞ்சியத்தில் அமர்ந்த முக்கண்நீலமிடற் றருமணியை வணங்கிப் போற்றிப்
 பாடொலிநீர்த் தலையாலங் காடுமாடு
 பரமர்பெரு வேளுரும் பணிந்து பாடி
 நாடுபுகழ்த் தணிச் சாத்தங் குடியில் நண்ணி
 நம்பர்திருக் கரவீரம் நயந்து பாடித்
 தேடுமறைக் கரியார்தம் விளமர் போற்றித்
 திருவாரூர் தொழ நினைந்து சென்று புக்கர்.
 -சேக்கிழார்.
 |  |