65.
திருக்கச்சிநெறிக் காரைக்காடு
|
பதிக வரலாறு:
திருவேகம்பத்தில்
அமர்ந்த செழுஞ்சுடரை ஒருபோதும் தப்பாதே
உள்ளுருகிப் பணிகின்றவராய்த் திருவியமகம், திருவிருக்குக்குறள் முதலிய
திருப்பதிகத் தொடை புனைந்தருளும் பிள்ளையார், நீடு திருப்பொழிற்காஞ்சி
நெறிக் காரைக்காடு இறைஞ்சித் துணைமலர்ச் சேவடி பாடியருளியது
இத் திருப்பதிகம்.
பண்: பஞ்சமம்
ப.தொ.எண்:323 |
|
பதிக
எண்: 65 |
திருச்சிற்றம்பலம்
3492. |
வாரணவு முலைமங்கை பங்கினரா |
|
யங்கையினில்
போரணவு மழுவொன்றங் கேந்திவெண்
பொடியணிவர்
காரணவு மணிமாடங் கடைநவின்ற
கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக்
காட்டாரே. 1 |
1.
பொ-ரை: சிவபெருமான் கச்சு அணிந்த மெல்லிய முலையுடைய
உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். அழகிய
கையில் போருக்குரிய மழுவை ஏந்தியவன். திருமேனியில்
திருவெண்ணீற்றினைப் பூசியவன். மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள
இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாளிகைகளையும், பிரளயகாலத்து ஒலியோ
என்று சொல்லும் பேரோசையையுமுடைய காஞ்சியில், நீர் நிரம்பிய மலர்கள்
பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில்
வீற்றிருந்தருளுகின்றான்.
கு-ரை:
வார் அணவும் - கச்சு அணிந்த. போர் அணவும் -
போருக்குரிய; மழு. அங்கு - அசை. கார் அணவும் - மேகத்தை அளாவிய.
மணிமாடம் - இரத்தினங்கள் பதித்த வீடுகளையும். கடை நவின்ற கலி -
பிரளய காலத்து ஒலியோ என்று சொல்லும் பேரோசையையுடைய, கச்சி -
காஞ்சியின். நீர் அணவும் - நீர்
|