3515.
|
தாணுமிகு வாணிசைகொ
டாணுவியர் |
|
பேணுமது காணுமளவிற்
கோணுநுத னீணயனி கோணில்பிடி
மாணிமது நாணும்வகையே
ஏணுகரி பூணழிய வாணியல்கொண்
மாணிபதி சேணமரர்கோன்
வேணுவினை யேணிநகர் காணிறிவி
காணநடு வேணுபுரமே.
2 |
கு-ரை:
சுரர் உலகும் - தேவலோகமும். நரர்கள் பயில் - மனிதர்
வாழும். தரணி தலம் - பூலோகமும், முரண் அழிய - வலிமை அழியும்படி.
(அதனால்,) அரணம் - காவலாகிய. முப்புரம் - முப்புரமுடிய. சரவிசை -
அம்பின் விசையால், விரவுவகை எரிய - கலந்து பல இடமும் எரியும்படி.
கொள் - (அவ்வம்பைக்) கொண்ட, கரம் உடைய, பரமன் இடமாம். நிரை -
வரிசையாக, நிறைகொள் - நிறைவையுடைய. வரன்முறையின் வரு -
வரன்முறையில் ஓதிவருகின்ற. சுருதி சிரம் - வேத முடிவாகிய
உபநிடதங்களின், உரையினால் - வசனங்களினால். உயர் - எவரினும்
உயர்ந்த, அரன் - சிவபெருமானின். எழில் கொள் - அழகையுடைய, சரண
இணை - இரு திருவடிகளையும். வரம் அருள - தனக்கு வரம் அருள்வான்
வேண்டி, பிரமன். பரவ - துதிக்க. வளர் - புகழால் ஓங்கிய. பிரமபுரமே -
பிரமபுரம் என்னும் பெயர்பெற்ற தலமாம்.
2.
பொ-ரை: தன்னை அன்பால் வழிபடும் தேவர்கள் கயமுகாசுரனால்
துன்புற்று அஞ்சி வழிபட, நிலைபெற்ற சிவபெருமான் வலிமைமிகுந்த
ஆண்யானையின் வடிவம் கொண்டருளினார். வளைந்த நெற்றியையும், நீண்ட
கண்களையுமுடைய உமாதேவி குற்றமில்லாதபடி பெண்யானையின் உருவை
எடுத்தாள். மது என்னும் அசுரன் வெட்கப்படும்படியும், வலிமைகொண்டு
தீமை செய்த கயமுகாசுரன் அழியுமாறும் ஆற்றல்மிக்க அழகிய விநாயகக்
கடவுளைத் தோற்றுவித்த பெருமைக்குரிய சிவபெருமான் வீற்றிருந்தருளும்
பதியாவது, வானுலகிலுள்ள தேவர்களின் தலைவனான இந்திரன்
சூரபதுமனுக்கு அஞ்சி ஒளிந்து வாழ்ந்தால் மூங்கிலை ஏணியாகக் கொண்டு,
தான் நேரே காணமுடியாத தேவலோகத்தின் நிலையை ஒளிந்து
காணும்பொருட்டு நட்ட வேணுபுரம் ஆகும். சூரபதுமனுக்கு அஞ்சி இந்திரன்
வந்து மூங்கிலில் மறைந்திருந்து பூசித்த வரலாற்றால் போந்த பெயர்
வேணுபுரம் என்பது.
|