3536. |
அந்தண்வரை வந்தபுன றந்ததிரை |
|
சந்தனமொ டுந்தியகிலும்
கந்தமலர் கொந்தினொடு மந்திபல
சிந்துகயி லாயமலைமேல்
எந்தையடி வந்தணுகு சந்தமொடு
செந்தமிழி சைந்தபுகலிப்
பந்தனுரை சிந்தைசெய வந்தவினை
நைந்துபர லோகமெளிதே. 11 |
திருச்சிற்றம்பலம்
கு-ரை:
அண்டர் தொழு - தேவர்கள் வணங்கக் கூடிய, சண்டி
-சண்டேசுவர நாயனாரின், பணி கண்டு - வழிபாட்டைக் கண்டு, அடிமை
கொண்ட - ஆட்கொண்ட, இறை - கடவுளும், துண்டம் - துண்டாகிய,
மதியோடு - பிறைச் சந்திரனோடு, இண்டை-இண்டைமாலையால். புனைவு
உண்ட - அலங்கரிக்கப்பட்ட. சடை - சடையினிடத்தில், முண்டதர -
நகுவெண்டலையைத் தரித்தருளியவரும், சண்ட இருள் - கடிய இருள்
போன்ற, கண்டர் -கழுத்தையுடையவரும், ஆகிய சிவபெருமானின்
இடமாம். குண்டு அமணவண்டர் அவர் - மூர்க்கத்தனத்தையுடைய
சமணர்களாகிய கீழ் மக்களும், மண்டைகையில் உண்டு - கையில்
ஏந்திய மண்டையில் உணவு உண்டு, உளறி - உளறித்திரிந்து, மிண்டு -
ஏமாற்றுகின்ற, சமயம் - சமயங்களை, கண்டவர்கள் - அறிந்தவர்களும்,
கொண்டவர்கள் - அநுட்டிப்போரும், பண்டும் அறியாத -அக்காலத்திலும்
அறியாத கயிலாயமலையே.
11.
பொ-ரை: அழகிய, குளிர்ச்சி பொருந்திய மலையிலிருந்து விழும்
நீரின் அலைகள் சந்தனம், அகில் இவற்றை உந்தித் தள்ள, நறுமணம்
கமழும் மலர்க் கொத்துக்களோடு குரங்குக் கூட்டங்கள் சிதறும்
திருக்கயிலாயமலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைப்
போற்றி, சந்த இசையோடு செந்தமிழில் திருப் புகலியில் அவதரித்து
திருஞானசம்பந்தர் அருளிச்செய்த இத்திருப் பதிகத்தை மனத்தால் சிந்தித்து,
வாயால் ஓத வினையாவும் நலியப் பரலோகம் எளிதில் பெறக்கூடும்.
கு-ரை:
அம் தண் - அழகிய குளிர்ந்த, வரை வந்த புனல் தந்த
-மலையில் வரும் அருவிகளில் உண்டாகிய, திரை - அலைகள், சந்தனமொடு
-சந்தனக் கட்டைகளோடு, உந்தி - தள்ளிக் கொண்டு
|