வந்து, அகில் - அகில்
கட்டைகளும், கந்த மலர் - வாசனை பொருந்திய
மலர்களின், கொந்தினொடு - கொத்தோடும், மந்தி பல - பல குரங்கின்
கூட்டங்கள், சிந்து - சிதறும்; கைலாய மலையின்மேல். எந்தையடி - எமது
தந்தையாகிய சிவபெருமானின் திருவடியை, வந்து அணுகும் - வந்து சேர்ந்த;
சந்தமொடு - வழி மொழித் திருவிராகமாகிய சந்த இசையோடு, (செந்தமிழ்
இசைத்த); புகலி - சீர்காழியில் அவதரித்த, பந்தன் உரை
-திருஞானசம்பந்தமூர்த்திகள் அருளிச் செய்த இப்பாடல்களை, சிந்தை செய
-தியானிக்க, வந்த வினை - துன்புறுத்த வந்த பிணிகள், நைந்து - கெட்டு,
(அதனால்) பரலோகம் எளிது - பரலோகம் எளிதில் பெறக்கூடியதாகும்.
திருஞானசம்பந்தர்
புராணம்
அங்கண்வட
திசைமேலும் குடக்கின் மேலும்
அருந்தமிழின் வழக்கங்கு நிகழா தாகத்
திங்கள்புனை முடியார்தந் தானந் தோறும்
சென்றுதமிழ் இசைபாடுஞ் செய்கை போல
மங்கையுடன் வானவர்கள் போற்றி சைப்ப
வீற்றிருந்தார் வடகயிலை வணங்கிப் பாடிச்
செங்கமல மலர்வாவித் திருக்கே தாரம்
தொழுதுதிருப் பதிகஇசை திருந்தப் பாடி.
-சேக்கிழார்.
கயிலைபாதி
காளத்திபாதி அந்தாதி
சொல்லும் பொருளுமே தூத்திரியும் நெய்யுமா
நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச்-சொல்லரிய
வெண்பா விளக்கா வியன்கயிலை மேல்இருந்த
பெண்பாகர்க் கேற்றினேன் பெற்று.
-நக்கீரதேவ
நாயனார்
|
|