பக்கம் எண் :

904திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3565. நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர்
       வல்லவகையால்
தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய்
     சோதியிடமாம்
நீளவளர் சோலைதொறு நாளிபல துன்றுகனி
     நின்றதுதிர
வாளைகுதிகொள்ளமது நாறமலர் விரியும்வயல்
     வைகாவிலே.                         7


சிவபெருமான். அமர்கின்ற - தங்கும் (இடமாம்), அஞ்சுடரொடு - அழகிய
தீப முதலியவற்றுடன். ஆறுபதம்: - பஞ்சப்பிரம மந்திரங்கள் ஐந்தையும்,
ஐந்தாகவும், அங்க மந்திரம் ஆறினையும் ஒன்றாகவும் கொண்டு ஆறுபதம்
என்றார். இதற்கு வேறு பொருள் கூறுவாருமுளர். (பதம் - மந்திரம்) ஏழிசை
- ஏழுசுரங்களோடு பாடும் தோத்திரப் பாடல்களுடனும். எண்ணரிய
வண்ணம் உளவாய் - எண்ணமுடியாத விதம் உளவாக. மஞ்சரொடு -
ஆடவர்களொடு (மாதர் பலரும்) தொழுது - வணங்கி. சேரும் - அடைகின்ற
வயல்சூழ்ந்த திருவைகாவில் என்க. அஞ்சுடர் ... எண்ணரிய இவை குறிப்பாக
இலக்கங்களை யுணர்த்துகின்றன. அதனால் இவை எண்ணலங்காரம் எனப்படும்.

     7. பொ-ரை: நாள்தோறும் பக்தியோடு தோத்திரப் பாடல்கள் பாடி,
ஞானமலர்களான கொல்லாமை, அருள், ஐம்பொறி அடக்கல், பொறை, தவம்,
வாய்மை, அன்பு, அறிவு இவை கொண்டு தோள்களும், கைகளும் கூப்பித்
தொழுபவர்கட்கு அருள் செய்கின்ற சோதிவடிவான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது, நீண்டு வளர்ந்த சோலைகளிலுள்ள
தென்னைகளிலிருந்து முற்றிய நெற்றுக்கள் உதிர, அதனால் வாளைமீன்கள்
துள்ளிப்பாய, அதனால் தேன்மணக்கும் மலர்கள் விரிய வயல்கள் சூழ்ந்த
திருவைகாவூர் என்னும் திருத்தலம் ஆகும்.

     கு-ரை: நாளும் - நாடோறும். மிகுபாடலொடு - மிகுந்த பாடலொடு.
ஞானமிகும் - சிவஞானமிக்க. நல்லமலர் - நல்ல மலர்களோடு. தோளினொடு
கைகுளிர - தோளும் கையும் குளிரும் படியாக. தொழுமவர்க்கு -
வணங்குகின்றவர்களுக்கு. அருள்செய் - அநுக்கிரகம் பண்ணுகின்ற. சோதி
இடமாம் - ஒளிவடிவானவனது