பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)71. திருவைகாவூர்903

3564. நஞ்சமுது செய்தமணி கண்டனமை யாளுடைய
       ஞானமுதல்வன்
செஞ்சடையி டைப்புனல்க ரந்தசிவலோகனமர்
     கின்றவிடமாம்
அஞ்சுடரொ டாறுபத மேழினிசை யெண்ணரிய
     வண்ணமுளவாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல்
     வைகாவிலே.                          6


சிறந்த தாழைகள், புன்னை, புலிநகக்கொன்றை மிகுந்துள்ளதும், மிக்க
அழகுடைய மாதவிக் கொடிகள் நறுமணம் கமழவும் வண்டுகள் பல
பாடவும் விளங்கும் சோலைகள் சூழ்ந்ததுமாகிய திருவைகாவூர் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: வேதமொடு - வேதத்தைக்கற்றதோடு, பலவாயின வேள்வி -
பலவாகிய யாகங்களையும், மிகுந்து - மிகச் செய்து, விதி - விதிப்படி.
ஆறு சமயம் - ஆறுசமய நூல்களையும், ஓதியும் - கற்றும். (உணர்ந்தும்)
உள - உள்ள. தேவர்தொழ - பூ தேவர்களாகிய அந்தணர் (தொழ)
மேதகைய - மேன்மை தங்கிய. கேதகைகள் - தாழைகளும். புன்னையொடு
ஞாழல் - புன்னைமரத்தோடு புலிநகக் கொன்றைகளும். மிகுந்த அழகோடு
கூடிய. மாதவி - மாதவிக்கொடிகளும் (மணங்கமழ) வண்டு பல பாடும்
(சோலைசூழ்ந்த வைகாவில்).

     6. பொ-ரை: சிவபெருமான் நஞ்சை அமுது போன்று
உட்கொண்டவன். நம்மை ஆட்கொள்கின்ற ஞானமுதல்வன். சிவந்த
சடையிலே கங்கையை ஒளித்த சிவலோக நாயகனாகிய அச்சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது அழகிய தீபச்சுடருடன், பிரணவம் முதலாகிய
பஞ்சாட்சரத்தைப் பொருளுணர்ந்தது உச்சரித்து, ஏழுசுரங்களோடு பாடும்
தோத்திரப் பாடல்களைப் பாடி, எண்ண முடியாத விதத்தில்
ஆடவர்களோடு மகளிர்கள் பலரும் தொழுது வணங்கும், வயல்வளமிக்க
திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: நஞ்சு - அமுதுசெய்த விடத்தை உண்டருளிய. மணிகண்டன்
- நீலகண்டனும், நமை - நம்மை. ஆளுடைய - ஆளாகவுடைய. ஞானம் -
முதல்வன். ஞானமே திருவுருவாகிய முதல்வன். செஞ்சடையிடை - சிவந்த
சடையினிடத்தில். புனல்கரந்த - கங்கை நீரை ஒளித்த. சிவலோகன் -
சிவலோக நாயகனுமாகிய