|
ஞானசம்பந்தன் அருளிய
இத்தமிழ்ப்பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள்
உருத்திரர்களாகிச் சிவலோகத்தில் முத்தியின்பத்தில் இருந்து பிரியாது
புகழுடன் வாழ்வர்.
கு
- ரை: செற்ற - மிகுத்த. ம(ல்ல)லின் - வளங்களால், ஆர் -
நிறைந்த (செற்ற - தன்னையடைந்தோர் வினைகளை அழித்த, எனினும்
ஆம்.) சிரபுரத்தலைவன் - சீகாழித் தலைவராகிய, ஞானசம்பந்தர்,
உருத்திரர் எனப்பெற்று அமரலோக மிக உருத்திரர் ஆகி சிவலோகத்தில்.
பெரும் புகழோடு - பெரிய புகழ்ச்சிக்குரியதாகிய முத்தியின்போடு, பிரியார்
- நீங்காதவராகி மிக வாழ்வார் என்க. அமரன் - (சாவாதவன்)
சிவபெருமான் ஒருவர்க்கேயுரியது. செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று,
பத்தி செய் மனப்பாறைகட்கேறுமோ என்பதும் சாவா மூவாச் சிங்கமே
என்பதும் அப்பமூர்த்திகள் திருவாக்கு. (திருக்குறுந்தொகை:
திருத்தாண்டகம்). ஆகையால் அமரலோகம் என்பது சிவலோகத்தைக்
குறிக்கும்.
திருஞானசம்பந்தர்
புராணம்
விசயமங்
கையினிடம் அகன்று மெய்யர்தாள்
அவைவில்வை காவினில் அணைந்து பாடிப்போந்(து)
இசைவளர் ஞானசம் பந்தர் எய்தினார்
திசையுடை ஆடையர் திருப்பு றம்பயம்.
-சேக்கிழார்.
ஞானசம்பந்தர் தேவாரத்தில் இறைவனுக்குரிய
அபிடேகப் பொருள்கள்
பாலினால் நறுநெய்யால் பழத்தினால் பயின்றாட்டி (தி.1.ப.61பா.5)
தேன் நெய் பால் தயிர் தெங்கிளநீர் கரும்பின்
தெளிஆன் அஞ்சாடும் முடியான்
(தி.1.ப.6பா.5)
ஆடினாய் நறுநெய்யோடு பால் தயிர்
(தி.3.ப.1பா.1)
பாலொடு நெய்தயிர் பலவும் ஆடுவர்
(தி.3.ப.15பா.3)
|
|