பக்கம் எண் :

914திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள்
     கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர்
     வானுலக மேறலெளிதே.            6

3576. வெய்யவினை நெறிகள்செல வந்தணையு
       மேல்வினைகள் விட்டலுறுவீர்
மைகொள்விரி கானன்மது வார்கழனி
     மாகறலு ளானெழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி
     தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை யஞ்சியடை
     யாவினைக ளகலுமிகவே.          7


கூடி இறைவனை இனிது இறைஞ்சும் தன்மையில் தேவர்களை ஒத்து
விளங்குகின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் மின்னல்போல் ஒளிரும் விரிந்த
செஞ் சடையின்மேல் மலர்களையும், கங்கையையும், பிறைச் சந்திரனையும்
அணிந்துள்ளான். அப்பெருமானை நினைந்து வழிபடுபவர்களின்
தொல்வினைகள் நீங்க, உயர் வானுலகை அவர்கள் எளிதில் அடைவர்.

     கு-ரை: பல்படிமம் - பல தவ வேடத்தையுடைய. மாதவர்கள் -
முனிவர்கள், இன்ன - இது போன்ற. வகையால் - விதங்களால், (இனிது).
இறைஞ்சி - வணங்கி, இமையோரில் எழு - நரை திரை மூப்புச்
சாக்காடின்றி, வானவரைப்போல் தோன்றும். மின்னை விரிபுன்சடையின்
மேல் - மின்னலைப்போல் ஒளியை விரிக்கின்ற சிறிய சடையின்மேல் -
(மலர்களும் கங்கையும் திங்களும்). என - எனவரும் இவற்றை. உன்னுவார்
- நினைப்போர்; சொரூபத்தியானம் பண்ணுபவர்கள். வினைகள் ஒல்க -
வினைகள் ஒழிய. உயர் வானுலகம் ஏறல் எளிது. சைவ வேடம்,
பஞ்சாட்சரசெபம், சோகம் பாவனை முதலியன இன்னவகையாலெனக்
குறிக்கப்பட்டவை. “புன்சடை... ...மலர் திங்கள் என” - எனவரும் இவற்றை
என்றது: - பாம்பு அணி, வெண்டலை மாலை, தோல் ஆடை முதலிய
கோலத்தை.

     7. பொ - ரை: கொடிய வினைகள் தாம் வந்த வழியே செல்லவும்,
இனி இப்பிறவியில் மேலும் ஈட்டுதற்குரிய ஆகாமிய வினைகளை