பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)72. திருமாகறல்915

3577. தூசுதுகி னீள்கொடிகண் மேகமொடு
       தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்க
     ளோதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு
     கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென வேத்தவினை
     நிற்றலில போகுமுடனே.          8


ஒழிக்க வல்லவர்களே! மேகங்கள் தவழும் ஆற்றங்கரைச் சோலைகளிலுள்ள
பூக்களிலிருந்து தேன் ஒழுகும் வயல்களையுடைய திருமாகறல் என்னும்
திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான்
யானையின் தோலை உரித்துப் போர்த்த அழகிய திருமேனியுடையவன்.
யாவர்க்கும் தலைவனான அப்பெருமானின் திருவடிகளை நினைந்து
வழிபடுபவர்களை வினையானது அடைய அஞ்சி அகன்று ஓடும்.

     கு-ரை: வெய்யவினை நெறிகள் செல - கொடிய வினைகள் தாம் வந்த
வழியே செல்லவும் - ‘வந்த வழியே செல்’ என்பது உலக வழக்கு. வந்து
அணையும் மேல் வினைகள் - ஆகாமியங்கள் (பலவாய் ஈட்டப்படுவதால்
பன்மையாற் கூறினார்.) வீட்டலுறுவீர் - ஒழிக்கத் தொடங்குகின்றவர்களே.
மைகொள் - மேகங்கள் படிந்த. விரி - விரிந்த. கானல் - ஆற்றங்கரைச்
சோலைகளின். மதுவார் கழனி - தேன்மிகும் கழனிகளையுடைய. (மாகறல்)
கானல் இப்பொருளிலும் வருவதைச் “செங்கானல் வெண்குருகு பைங்கானல்
இரைதேரும் திருவையாறே” என்றருளிச் செயலால் அறிக.
(தி.1. ப.130. பா.3.)

     8. பொ-ரை: பொன்மயமான மாடங்களின் உச்சியில் கட்டப் பட்டுள்ள
வெண்துகிலாலான கொடிகள் கருநிற மேகத்தைத் தொடுகின்ற மாசுபடு
செய்கை தவிர வேறு குற்றமில்லாத, பெரிய தவத்தார்கள், வேதங்கள் ஓத
விளங்கும் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் பாசுபத கோலத்தை விரும்பி,
வரிகளையுடைய விடமுடைய பாம்பைக் கச்சாக அணிந்த அழகுடையவன்.
திருவெண்ணீற்றைப் பூசியவன். அவனைப் போற்றி வழிபட வினையாவும்
நில்லாது உடனே விலகிச் செல்லும்.