பக்கம் எண் :

918திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3580. கடைகொணெடு மாடமிக வோங்குகமழ்
       வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி
     கூடுசம் பந்துனுரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழின்
     மாகறலுளா னடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள்
     தொல்வினைக ளொல்குமுடனே.     11

திருச்சிற்றம்பலம்


நெற்றிக்கண், கை, திருமேனிமுழுதும் ஆகிய நாலிடத்தும் நெருப்பும்.
நாலும் - (அளவையாகுபெயர் ஏழாம் வேற்றுமைத் தொகை.) உரியும்
தோலும், சட்டையுரிக்கின்ற நாகமும் ஆகிய இவற்றொடு பொருந்தி
என்பது மூன்றாம் அடியின் பொருள். உரிநாகம் - வினைத்தொகை.
ஆலும் - அசைந்து நடக்கும் விடை.அடிகள் அடியாரையடையா
வினைகளே - பெருமானின் அடியாரை வினைகள் அடையா.

     11. பொ-ரை: வாயில்களையுடைய மிக உயர்ந்த நீண்ட மாடங்களும்,
நறுமணம் கமழும் வீதிகளும் உடைய சீகாழியில் வாழ்பவர்கட்குத்
தலைவனான திருஞானசம்பந்தன், சிவபெருமானைச் சேர்தற்குரிய
நெறிமுறைகளால் துதித்து, மடைகளில் தேங்கிய தண்ணீர் ஓடிப் பாய்கின்ற
வயல்களும், நெருங்கிய சோலைகளுமாக நீர்வளமும், நிலவளமுமிக்க
திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப்
போற்றி அருளிய இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் உணர்ந்து
ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும்.

     கு-ரை: கடைகொள் - வாயில்களையுடைய. நெடுமாடம் - நீண்ட
மாடங்கள். மிக ஓங்கு - மிகவும் உயர்ந்த. கமழ்வீதி - வாசனை கமழும்
வீதிகள். மலி - மிகுந்த. காழியவர் - சீகாழியில் உள்ளவர்களுக்கு. கோன்
- தலைவனான (திருஞானசம்பந்தன்). அரனை அடையும் வகையால் - சிவ
பெருமானைச் சேர்வதற்குரிய விதத்தால். பரவி - துதித்து. அடிகூடு -
திருவடியைப் பற்றுக்கோடாகச் சேர்ந்த (சம்பந்தன்). மடைகொள் -
மடைகளில் தேங்கிய தண்ணீர். ஓடும் - ஓடிப்பாய்கின்ற. வயல்களும்.
கூடு - கூட்டமான. பொழில் - சோலைகளும் உடைய. மாகறல் உளான்.
தொல்வினைகள் - பழமையான வினைகள். ஒல்கும் - வலிகுறைந்து நீங்கும்.