பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)72. திருமாகறல்917

3579. காலினல பைங்கழல்க ணீண்முடியின்
       மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானுமறி யாமையெரி
     யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய
     நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி
     யாரையடை யாவினைகளே.     10


தோன்ற - விரிய; (மது உண்கின்ற) பாய - பரந்த. வரி - கீற்றுக்களையுடைய
(பல வண்டுகள்) பண் - பாடல்களை. முரலும் - இசைபாடும். ஓசைபயில் -
ஓசைமிகுந்த (மாகறல்) சாய - வலி குறையும்படி. விரல் ஊன்றிய - விரலால்
அடர்க்கப்பட்ட, இராவணன் - இராவணனுடைய. தன்மைகெட - நிலை
குலைய நின்ற பெருமான். ஆய - பொருந்திய. புகழ் - புகழை. ஏத்தும் -
துதிக்கும். அடியார், வினை ஆயினவும் - வினை அனைத்தும் அகல்வது
எளிது. ஆயின வினையெனக்கொண்டு - இப்பிறப்பில் ஈட்டிய ஆகாமிய
வினைகளும் எனலும் ஆம். அப்பொழுது உம்மை இறந்தது தழுவிற்றாம்.
சாய்தல்: - உரிச்சொல். இப்பொருட்டாதலைத் தொல்காப்பியம்
உரியியற்சூத்திரம் (34) கொண்டறிக.

     10. பொ-ரை: பைம்பொன்னாலாகிய வீரக்கழல்களை அணிந்த
திருவடிகளையும், நீண்ட சடைமுடியையும் காணவேண்டும் என்ற
விருப்பமுடன் முயன்ற திருமாலும், பிரமனும் அறியாவண்ணம் நெருப்புப்
பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் திருமாகறலில் வீற்றிருந்தருளுகின்றான்.
உடம்பில் நாலிடத்து நெருப்பைக் கொண்டும், தோலுரித்து மாணிக்கத்தைக்
கக்கும் பாம்பணிந்தும், அசைந்து நடக்கின்ற இடபத்தை வாகனமாகக்
கொண்டுள்ள சிவபெருமானின் அடியார்களை வினைகள் அடையா.

     கு-ரை: காலின் - திருவடிகளில் அணிந்த. நல - நல்ல. பைங்கழல்
மேல் - பைம்பொன்னால் ஆன வீரகண்டையின் மேலும். நீள் முடி - நீண்ட
முடியின்மேல். சிரசின்மேல் அணிந்த சந்திரன் முதலியவற்றின் மேலும்.
உணர்வு - அறிதலில். காமுறவினார் - விருப்பமுற்றவர்களாகிய. மாலும்
மலரானும் - திருமாலும், பிரமனும். அறியாமை - அறியாதபடி. எரியாகி -
நெருப்புப் பிழம்பாகி. உயர் - உயர்ந்த (திருமாகறலில் உள்ளவன்) நாலும்
எரி - சிரிப்பு,