பக்கம் எண் :

ஆராய்ச்சிக் கட்டுரைகள்93

     நாளும் ஓதுவோரிடம் புகுதர, இயமதூதரும் அஞ்சுவர். ஓதுவார் பல
நல்ல குணங்கள் இல்லாராயினும் ஆகுக; கொலை செய்வாராயினும் ஆகுக.
அவர் எல்லாத் தீங்கும் நீங்கி இன்புற்றிருப்பர். (- பா.5)

     மந்தரகிரியை ஒக்க மிகப் பெரும் பாவங்களைச் செய்தவரும்
திருவைந்தெழுத்தை ஓதுவாராயின், புண்ணிய சொரூபராய் மாறிவிடுவர்.
ஏழுநரகமும் எட்டிப் பார்க்கும் இழிநராயினும் அவர் வாயில் ஒருமுறை
திருவைந்தெழுத்து ஓத வாய்த்தால் உருத்திரகணத்துள்ளே ஒருவராக்கிவிடும்.
(- பா.6)

     கயிலாயத்தைத் தூக்கிக் கலக்கமுற்ற காலத்தில் அக்கலக்கம் விலக்கி
இராவணனைக் காத்தது திருவைந்தெழுத்தேயாகும். (- பா. 8)

     அயனும் அம்புயநயனனும் தேடி அலைந்தும் காணாமல் அலந்து ஓதி
உய்ந்ததும் திருவைந்தெழுத்தே. அதுவே உயிர்களின் பந்த பாசம்
அறுக்கவல்ல ஒப்புயர்வில்லாத திப்பியத் திருமந்திரம். (- பா. 9)