பக்கம் எண் :

92ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

பொருட்படுத்தாத சித்தத்தவர்கள் தெளிந்து தேறியன. (- பா.10)

     இராவணனும் அவன் மனைவி மண்டோதரியும் பாடிப் பேணிப்
பயன்பெற்று உய்யச் செய்தன. (- பா.8)

     மாலும் நாலுமுகனும் காணவொண்ணாத சேவடிச் செவ்வி உணர்ந்து
திருப்பெயர் வண்ணங்களைப் பேசியும் பிதற்றியும் திருவருட்
பித்துக்கொளிகளாகிய மெய்யடியவர்களுக்கு உள்ளமும் உணர்வும் நிறையும்
வண்ணம் ஆவன. (- பா. 9)

     நல்லவர் தீயர் என்று பிரிவுசெய்யாமல், விரும்பி உருவேற்றி வரும்
அன்பர் எல்லவர்க்கும், செல்லல் ஒழியச் சிவமுத்தியைக் காட்டுவன.
(- பா.4)

     திருவைந்தெழுத்தே காமபாணம், பிருதிவியாதிபூதம், பாம்பின்படம்,
கைவிரல் முதலியவை ஐந்தைந்தாக அமைந்திருக்கும் (உலகத்) தோற்றத்திற்கு
அடியாகும். (- பா. 5)

     இத்திருவைந்தெழுத்துப் பதிகத்தை ஓதியுணர வல்லவர் உம்பர் ஆவர்.
(- பா.11)

     இத்தகைய சீரிய கருத்துச் செல்வங்களைப் பஞ்சாக்கரத் திருப்பதிகம்
வாரி வழங்கி நிற்கின்றது. நாதன், நம்பன், நக்கன், நெற்றிநயனன், நல்லார்,
நந்தி, வரதன், நஞ்சுண்கண்டன். என்னும் திருப்பெயர்களையுடைய
சிவபிரானது திருநாமம் நமச்சிவாய என்பது. (தி.3 ப. 49) அதுவே, நான்மறை
மெய்ப்பொருள் ஆவது. எல்லாவுலகிற்கும் அதுவே செம்பொற்றிலகம்.
‘நமக்குண்டாகும் நலங்கொள் நாமம்’. அதனை ஓதும்போது உள்ளம்
காதலாகிக் கசிதல் வேண்டும். கண்ணில் நீர்மல்கல் வேண்டும். நா
நவிற்றல்வேண்டும். உள்ளம் நெக்குருகி நினைய ஆர்வம் மிகப் பெருகிவர,
கையிற் கண்மணிமாலை கொண்டு உருவேற்றல்வேண்டும். ஓதுவதில் நயம்
தானாக வரல்வேண்டும். நமச்சிவாயத் திருப்பதிகத்தையும் சிந்தை மகிழச்
சிவபுராணமென்று உணர்ந்து ஏத்துதல்வேண்டும். நைந்த உளத்தொடு நாவில்
ஓதும்போதெல்லாம் பூந்தேனைப் போலினிக்கும் திருவைந்தெழுத்து, தம்மை
விதிப்படி ஓதுவார் எல்லாரையும் நன்னெறியிற் செலுத்தும்; தக்க வானவராகத்
தகும் வகை செய்யும்; எல்லாத் தீங்கையும் நீக்கும்; வல்வினைகளையும்
வாட்டும்; வாராத செல்வமும் வருவித்தளிக்கும்.