பக்கம் எண் :

ஆராய்ச்சிக் கட்டுரைகள்91

உறக்கத்திலும் விழிப்பிலும் உள்ளம் உருகி நாள்தொறும் நினைந்து
சிவபிரான் திருவடி மலர்களை வஞ்சமில்லாத நெஞ்சத்தால் வாழ்த்துவோரை,
மாய்க்கவந்த கூற்று அஞ்சுமாறு உதைத்தன. (தி.3 ப. 22 பா. 1)

     எமதூதர் கொல்லவேண்டிக் கொண்டுபோகும் இடத்திலும், உற்ற
நற்றுணையாய் வந்து, அவ்வல்லல் அகற்றிக் காத்தருள்வன. (தி.3 ப.22 பா.4)

     உடம்பில் மூச்சை ஒடுங்கச்செய்து, (உள்ளப் போக்கைத் தடுத்து)
உணர்வொளிச் சுடர் விளக்கினை ஏற்றி, மெய்யறிவாகிய மற்றை வழியைத்
திறந்து ஏத்துவோர்க்கு இடர்களைக் கெடுப்பன. (தி.3 ப. 22 பா.3)

     அழிவிற்கு அடியாகிய பிறவியை அறுத்து, அன்பு செலுத்தும் அடியவர்
துயரங்களைக் கெடுப்பன.(தி.3 ப. 22 பா. 7)

     எந்நாளும் செல்வம் கொடுப்பன. (தி. 3 ப. 22 பா. 7)

     நிலைத்த பெருங் கூத்து ஆடி உயர்வன. உவப்பன. (-. பா.7)

     தம்மைக்கொண்டு துதித்துவரும் தொண்டர்க்கு அண்டம்
அளித்துவருவன. (-. பா. 8)

     ஞான விபூதியை அணிவார்தம் வினையாகிய பகையைக் கொன்று
வென்றியுறுதற்குப் பெரிய படைக்கருவியாவன. (- பா. 10)

     தும்மல், இருமல் தொடர்ந்தபோழ்திலும், கொடிய நரகம்
குறுகியபோழ்திலும், இப்பிறவியில் பழவினைகள் வந்து வருத்தும் போழ்திலும்,
மறுபிறவியிலும் திருவைந்தெழுத்தே உயிர்த்துணையாய் நின்று காக்கும்.
(- பா.6)

     நான்மறையும் மந்திரமும் ஆகி வானவர் சிந்தையுள் நிலைத்து அவரை
ஆள்வன. (- பா. 2)

     செந்தீயோம்பும் செய்ய வேதியர் சந்திதொறும் உருவேற்றும்
திருமந்திரமாவன. (- பா.2)

     புத்தர் சமணர் முதலிய புறப்புறச்சமயத்தவர் பொய்களைப்