|
பொருந்தும் எனினும்,
அருட்பெரியார் ஒருவர் ந-ம என்னும் ஈரெழுத்தையும்
மாற்றி வகாரம் (அருள்) ஆகிநின்ற பெருமான் (சிகாரம்) என்று
உபதேசித்தருளியது யாவரும் அறியத்தக்கது. ந+ம+ஆன=நம்மான என்று
பிரித்தார். ப+அந்தம்=பாந்தம் (நன்னூல் 145) என்றதைக்கொள்ளும்
புலவர்க்கு இது பொருந்துவதே.
2. "நக்கர்தம்
நாமம் நமச்சிவாயவ் வென்பார் நல்லரே". (தி.3ப.9
பா.9)
இவற்றால்,
தூலபஞ்சாக்கரம் உணர்த்தப்பெற்றதை அறிக.
3. "நண்பாற் சிவாய எனா நாலூர்மயானத்தே
இன்பாயிருந்தானை
ஏத்துவார்க்கு இன்பமே".
(தி.2 ப. 46 பா. 10)
என்பதில், முத்திபஞ்சாக்கரம்
உணர்த்தப் பெற்றுள்ளது.
4.1 "வசிவல
அவனது இடம்.... கழுமல வளநகரே".
(தி.1 ப.126 பா.2)
4.2 "வசி
ஆற்ற மாமதியும் ஆம்வலியாம்
மழபாடி..... நாதன் நற்பாதமே".
(தி.3 ப. 48 பா.2)
4.3 "மாதர்
மனைதோறும் இசைபாடி வசிபேசும்
அரனார் மகிழ்விடம்".
(தி.3 ப.77 பா.2)
4.4 "கலந்தருள்
பெற்றது மாவசியே காழியரனடி மாவசியே". (தி.3
ப.113 பா. 10)
என்பவற்றில்,
பிஞ்செழுத்தும் பேரெழுத்தும் ஆகிய திருவைந்
தெழுத்து உணர்த்தப்பெற்றமை உபதேசம் உற்றார்க்கே உள்ளவாறு
காணலாகும்.
இத்திருமுறைகளுள்
ஆங்காங்குத் திருவைந்தெழுத்தின் சீரும்
சிறப்பும் நயனும் பயனும் பலபடக் குறித்திருத்தலை, திருமுறைப்
பாராயணத்தைப் பொருளுணர்ச்சியொடு புரிந்து வரும் மெய்யன்பர் பலரும்
அறிவர். அவற்றைத் தொகுத்துக் காட்டும் வன்மை அடியேனுக்குச் சிறிதும்
இல்லாமையால், ஒரு சிறிது, இக்கட்டுரையால் குறிப்பதற்கு அவாவி,
என் சிற்றறிவின் பெற்றிமையைப் புலப்படுத்திவிட்டேன்.
|