|
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்த
சுவாமிகள் அருளிய திருமுறைகளின்
சிற்றாராய்ச்சிப்
பெரும் பொருட் கட்டுரை - 2
திருவைந்தெழுத்து
தருமை
ஆதின வித்துவான்
முத்து.
சு. மாணிக்கவாசக முதலியார்
திருஞான
சம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருமுறை மூன்றனுள்ளும், நாவினுக்கு அருங்கலமாகிய நமச்சிவாயத்தின்
அரும்பேருண்மைகளைத் தெளித்துச் செல்லும் இடங்கள் பல உள்ளன.
அவற்றுள்,
இரண்டு திருப்பதிகங்கள், திருவைந்தெழுத்தின் சீர்த்தியை விளக்குவதற்கே அருளப் பெற்றிருக்கின்றன.
அவை பஞ்சாக்கரத் திருப்பதிகம், நமச்சிவாயத் திருப்பதிகம் என்று குறிக்கப்பெறுவன.
அவ்
இரண்டனுள் முன்னது, துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின்
நாள்தொறும்... அஞ்செழுத்துமே, என்னும் முதற்றிருப்பாடலைக் கொண்டது, ஐந்தெழுத்து
என்று மட்டும் உணர்த்திற்று. அதனால், பஞ்சாக்கரத் திருப்பதிகம் என்னும் பெயர்
எய்தலாயிற்று.
பின்னது,
திருவைந்தெழுத்து வகையுள், தூலபஞ்சாக்கரமாகிய நமச்சிவாயத்தை வெளிப்படக் கூறியதால்,
நமச்சிவாயத் திருப்பதிகம் என்னும் குறிகொள்ளலாயிற்று. அவற்றின் பொருள்களைத்
தொகுத்து உணர்த்து முன்னர், சில உண்மைகளைக் குறிக்க விழைகின்றேன்.
1. நம்மான
மாற்றி நமக்கரு ளாய்நின்ற
பெம்மான் (தி.2 ப.11 பா.2)
என்பதில், நம் குற்றங்களை
மாற்றி என்று பொருள் கூறுவதே
|