|
பஞ்சவன், பண்டிமன்,
பட்டிமன், பத்திமன், வெள்ளைநீறணியுங் கொற்றவன், தென்னவன் உற்ற தீப்பிணியாயின
தீரச்சாற்றிய பாடல்கள் பத்தும்.
(தி.2 ப.66; தி.3 ப.51)
சிவபெருமானை
வழிபட்டுப் பேறுஎய்திய பலர் இத்திருமுறைகளுள்
குறிக்கப் பெற்றுளர்:- அநுமான், அயன், அரி, இந்திரன், இமையோர்,
இயக்கர், உருத்திரர், கின்னரர், சடாயு, சந்திரன், சம்பாதி, சரசுவதி,
உபமன்யு, கொச்சைமுனி, கௌதமர், சண்பைமுனி, சூதமுனி, சனகாதியர்,
நீரின் முாமுனிவன், பராசர முனிவர், வியாக்கிரபாதர், பதஞ்சலிமுனிவர்,
சித்தர், சிபி, சுக்கிரீவன், சூரியன், திக்குப்பாலகர், நளன், பிருகஸ்பதி,
பூரூரவா, மறவாளர், மார்க்கண்டேயர், முனிகணங்கள், யானை, இராகுகேது,
இராமர், இலக்குவர், வருணன், வாலி, விஞ்சையர் முதலியோர் ஆவர்.
விரிவஞ்சி இவ்வளவில் நிறுத்தலாயிற்று.
|