பக்கம் எண் :

ஆராய்ச்சிக் கட்டுரைகள்87

கோமான் பண்டைத் தொண்டரொடும்
     அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
     புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே”.
(திருவா.607)

என்னும் திருவாசகத்துள் இரண்டும் அமைந்தவாறு அறியலாம்.

“அடியார் ஆனீர்! எல்லீரும்
     அகல விடுமின் விளையாட்டைக்
கடிசேர் அடியே வந்தடைந்து
     கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசேர் உடலைச் செலநீக்கிச்
     சிவலோ கத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்றன்
     பூவார் கழற்கே புகவிடுமே”.
(திருவா.608)

எனப் புயங்க (பாம்பின்கால்) முனிவரால் வழிபடப்பெற்ற புயங்கன்
திருவடிக்குப் புகவிடும் மணிவாசகர், அடியாரை ஏவுந்திறத்தால் ஆண்டவன்
திருக்குறிப்பைப் புலப்படுத்தியது நன்கு விளங்குகின்றது.

13. அமர்நீதி நாயனார்

“கொடிறனார் யாதும் குறைவிலார் தாம்போய்க்
கோவணம் கொண்டு கூத் தாடும்
படிறனார்”.
                    (தி.3 ப.121 பா.1)

என்பதில், அமர்நீதி நாயனார் திருத்தொண்டு குறிக்கப்பெற்றுள்ளது என்பது
சிலர் கருத்து.

14. தில்லைவாழந்தணர

     அந்தணர் பிரியாத சிற்றம்பலம், கற்றாங்கு எரி ஓம்பிக் கலியை
வாராமே, செற்றார் வாழ்தில்லைச் சிற்றம்பலம், சீலத்தார் கொள்கைச்
சிற்றம்பலம், எரி ஓம்பும் சிறப்பர். மறையோர் தில்லை நல்லவர், நீலத்தார்...
சடையார்... சீலத்தார். (தி.1 ப.80; தி.3 ப.1)

15. நின்றசீர்நெடுமாற நாயனார்

     தமிழ்ப்பாண்டியன், தென்னவன், பங்கம்இல் தென்னன்.