3590. |
தடுக்கினை யிடுக்கிமட வார்களிடு |
|
பிண்டமது
வுண்டுழல்தரும்
கடுப்பொடி யுடற்கவசர் கத்துமொழி
காதல்செய்தி டாதுகமழ்சேர்
மடைக்கயல் வயற்கொண்மழ பாடிநகர்
நீடுபழை யாறையதனுள்
படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசர
மேத்தவிணை பற்றறுதலே. 10 |
அடைதல் எளிதாகும்.
(அதன்பயனாக அடைய வல்லது) மேல் - மேலான.
உலகமே - முத்தியுலகாம்.
10.
பொ-ரை: தடுக்கையேந்திப் பெண்கள் இடுகின்ற உணவை உண்டு,
சுற்றித் திரிகின்றவர்களும், கடுக்காய்ப் பொடியைத் தின்பவர்களுமான
சமணர்களும், உடம்பைப் போர்த்திக் கொள்கின்ற பௌத்தர்களும் கூறும்
அன்பற்ற மொழிகளை ஏற்க வேண்டா. மடைகளில் கயல்மீன்கள் பாய
வளப்பம் மிகுந்த வயல்களையுடைய நெடிய திருப்பழையாறையின்,
திருமழபாடி என்னும் நகர்ப் பகுதியில், திருப்பட்டீச்சரம் என்னும்
திருக்கோயில் மழுப்படையைக் கையிலேந்தி வீற்றிருந்தருளும்
சிவபெருமானைப் போற்றி வணங்க வினையாவும் முற்றிலும் நீங்கும்.
கு
- ரை: தடுக்கினை - இடுக்கி - (சென்ற இடங்களில் உட்காரத்)
தடுக்கை இடுக்கிக்கொண்டு. மடவார் - பெண்கள். இடு - இடுகின்ற.
பிண்டமது - உணவை. உண்டு உழல்தரும் - உண்டு சுற்றித்திரிகின்ற.
கடுப்பொடியார் - கடுக்காய்ப் பொடியைத் தின்பவரும். உடற்கவசர் -
உடம்பைப் போர்த்துக்கொள்பவருமான சமணரும் பௌத்தரும்.
(கத்துமொழி) காதல் செய்திடாது - விரும்பாமல்.
கமழ்சேர்
- வாசனையுடைய. மடைக்கயல் - மடையின்கண் கயல்
மீன்கள். (உலாவும்) வயல் - வயல்களையுடைய. மழபாடி நகர் - மழபாடி
நகராகிய. நீடுபழையாறையதனுள் - விஸ்தாரமான பழையாறை நகருள்.
படைக்கு ஓர் கரத்தன் - சூலப்படைக்கு ஏற்ற ஒரு கையை யுடையவன்.
(கரத்துக்கு ஏற்ற ஓர் படையன் - கையில் ஒரு சூலப்படையை ஏந்தியவன்
என்பது நேரிய பொருள்) மிகு - வளம்மிகுந்த. பட்டீச்சரம் ஏத்த,
வினைபற்றறுதலே அதன் பயன். அதன் பயனென்பது அவாய் நிலை.
|