3594. |
பண்டடவு சொல்லின்மலை வல்லியுமை |
|
பங்கனெமை
யாளுமிறைவன்
எண்டடவு வானவரி றைஞ்சுகழ
லோனினிதி ருந்தவிடமாம்
விண்டடவு வார்பொழி லுகுத்தநற
வாடிமலர் சூடிவிரையார்
செண்டடவு மாளிகை செறிந்துதிரு
வொன்றிவளர் தேவூரதுவே. 3 |
(கொங்கை). இளமங்கையர்கள்
- (கணவரோடு கூடிய) இளம் பெண்களின்.
குங்குமம் விரைக்கு - குங்குமக் குழம்பின் வாசனைக்கு. மணமார் - மேலும்
மணத்தைத் தருகின்ற (தென்றல்பிரிந்த மகளிர்க்கு) தேள் அரவு - தேள்
கொட்டுவதைப்போல் மோதுகின்ற (தென்றல் தெருவெங்கும்) நிறைவு ஒன்றி
- நிறைந்து. வரு தேவூர் அதுவே. தென்றல் காற்று கணவரொடு கூடிய
மகளிர்க்கு, பலமலர்களிற் படிந்து கொணர்ந்த வாசனையை வீசி இன்பஞ்
செய்கின்றதென்றும், பிரிந்த மகளிர்க்குத் தேள் கொட்டுவதுபோல் துன்பஞ்
செய்கின்றதென்றும் கூறியவாறு. கொங்கையிள மங்கையர் என்று
கூறப்பட்டிருப்பினும், மங்கையர் கொங்கையெனப் பொருள் கொள்ளல் நேர்.
வேள் அரவு - தொழிற்பெயர், தோற்று தேற்று என்னும் பகுதிகளில் தல்
விகுதிக்குப் பதில் அரவு என்னும் தொழிற்பெயர் விகுதி வந்து தோற்றரவு
தேற்றரவு என்றாதற்போல, வேள் + தல் வேட்டல். தல்விகுதிக்குப்பதில்,
அரவு நின்று, வேளரவு என்றாயிற்று.
3.
பொ - ரை: பண்ணிசை போன்ற இனிய மொழிகளைப் பேசுகின்ற
மலைமகளான உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு
எம்மையாளும் இறைவன் எண்ணற்ற தேவர்கள் தன் திருவடிகளை வணங்க
இனிது வீற்றிருந்தருளும் இடம், வானளாவி உயர்ந்த சோலைகள் உகுக்கும்
தேன்துளிக்கும் மலர்களைச் சூடி, அதனால் நறுமணம் கமழ, ஆகாயமளாவிய
உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருமகள்வாசம் செய்யும் திருத்தேவூர்
ஆகும்.
கு-ரை:
பண் தடவு - பண்ணின் இனிமை பொருந்திய (சொல்லின்)
மலைவல்லி உமை - மலையின் மகளாகிய உமாதேவியாரை. பங்கன் - ஒரு
பங்கில் உடையவனும். எமை - எம்மை (ஆளும் இறைவன்) எண் தடவு -
எண்ணத்தக்க. வானவர் - தேவர்கள். இறைஞ்சு கழலோன் - வணங்கும்
திருவடியையுடையோனுமாகிய
|