| 
         
          | 3593. | கோளரவு கொன்றைநகு வெண்டலையெ |   
          |  | ருக்குவனி 
            கொக்கிறகொடும் வாளரவு தண்சலம கட்குலவு
 செஞ்சடைவ ரத்திறைவனூர்
 வேளரவு கொங்கையிள மங்கையர்கள்
 குங்குமம் விரைக்குமணமார்
 தேளரவு தென்றறெரு வெங்குநிறை
 வொன்றிவரு தேவூரதுவே.           2
 |  
  ஆடை. புலி தோல் 
        - புலித்தோல். ஊண் - உணவு. தேடுபலி - தேடியுண்ணும் பிச்சை. உடை வேடம்மிகு - இவற்றையுடைய கோலம் மிக்க.
 வேதியர் - வேதத்தின் பொருளாயுள்ள சிவபெருமானது. திருந்துபதியாம் -
 திருத்தமான தலமாகும் (சோலைகளில்). மஞ்ஞை நாடகம் அது ஆட -
 மயில் நாட்டியம் ஆட. அரி - வண்டுகள். பாட - இசைபாட. கோடல் -
 காந்தள்கள். கைமறிப்ப - கரக்கம்பஞ்செய்ய. நலமார் - அழகுடைய.
 சேடுமிகு - இளமை மிக்க. பேடை அனம் - பெண் அன்னம்போன்ற மகளிர்.
 ஊடி - ஆடவரோடு பிணங்கி மகிழ் - அவர்கள் பிணக்கு நீக்குவதால்
 மகிழ்கின்ற. மாடம்மிடை - மாடங்கள் நெருங்கிய (தேவூர் அதுவே) அன்னம்
 - உவம ஆகுபெயர்.
       2. 
        பொ-ரை: கொல்லும் தன்மையுடைய பாம்பு, கொன்றை, சிரிக்கும் மண்டையோடு, எருக்கு, வன்னி, கொக்கு இறகு, ஒளி பொருந்திய பாம்பு,
 குளிர்ச்சி பொருந்திய கங்காதேவி, இவை குலவுகின்ற சிவந்த சடையுடைய
 சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், மன்மதனும் விரும்பும் கொங்கைகளை
 உடைய, கணவரோடு கூடிய இள மங்கையர்கட்குக் குங்கும குழம்பின்
 மணத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மையுடையதும், கணவரைப் பிரிந்த
 மகளிர்கட்குத் தேள் கொட்டுவது போல் துன்பஞ் செய்கின்ற
 தன்மையுடையதுமான தென்றல் காற்று தெருவெங்கும் நிறைந்து பெருகும்
 திருத்தேவூர் ஆகும்.
       கு-ரை: 
        கோள் அரவு - கொலைத் தொழிலையுடைய பாம்பு. (கொன்றை). நகுவெண்டலை - சிரிக்கும் வெண்டலை. (எருக்கு) வன்னி -
 வன்னியிலை. (கொக்கு இறகொடும்) வாள் அரவும் - ஒளிபொருந்திய
 பாம்பும்; தண் சல மகள் - குளிர்ச்சி பொருந்திய கங்காதேவியும். குலவு -
 குலவுகின்ற (செஞ்சடை) வரத்து - வளர் தலையுடைய. (இறைவன் ஊர்).
 வேள் அரவு - விரும்புதல் பொருந்திய
 |