|  | 
       பதிக வரலாறு:      சிறப்பின்மிக்க 
        பெருமைதரு சண்பை நகர் வேந்தர், நம்பர் மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து, நலம்கொள் திருக்காறாயில் நண்ணி ஏத்திப்,
 பைம்புனல் மென்பணைத் தேவூர் அணைந்து போற்றிப் பாடியருளியது
 இத்திருப்பதிகம்.
 திருவிராகம்பண்: சாதாரி
 
         
          | ப.தொ.எண்:332 |  | பதிக 
            எண்: 74 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 3592. | காடுபயில் வீடுமுடை யோடுகலன் |   
          |  | மூடுமுடை 
            யாடைபுலிதோல் தேடுபலி யூணதுடை வேடமிகு
 வேதியர் திருந்துபதிதான்
 நாடகம தாடமஞ்ஞை பாடவரி
 கோடல்கைம் மறிப்பநலமார்
 சேடுமிகு பேடையன மூடிமகிழ்
 மாடமிடை தேவூரதுவே.             1
 |  
       
       1. 
        பொ-ரை: சிவபெருமான் வசிக்கும் வீடு சுடுகாடாகும். முடைநாற்றம் பொருந்திய மண்டையோடு அவன் உண்கலமாகும். அவனது ஆடை
 புலித்தோலாகும். உணவு தேடியுண்ணும் பிச்சையாகும். இத்தகைய
 கோலமுடைய, வேதத்தை அருளிச் செய்த வேதப்பொருளாக விளங்கும்
 சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, சோலைகளில் மயில்கள் ஆட,
 வண்டுகள் பாட, காந்தள்கள் அசைந்து கைத்தாளமிட, அழகிய இளம் பெண்
 அன்னம் போன்ற பெண்கள் ஆடவர்களோடு ஊடி, பின் ஊடல் நீங்கி
 மகிழ்கின்ற மாடங்கள் நிறைந்த திருத்தேவூர் என்பதாகும்.
       கு-ரை: 
        பயில் வீடு - தங்கும் வீடு. காடு - மயானம். கலன் - உண்கலம். முடைஓடு - முடை நாற்றம் பொருந்திய மண்டையோடு.
 மூடும் - அரையை மூடும். உடை ஆடை - உடுத்துக் கொள்வதாகிய
 |