| 3621. |
முடித்தலைகள்
பத்துடை முருட்டுரு |
| |
வரக்கனை
நெருக்கிவிரலால்
அடித்தலமுன் வைத்தலம ரக்கருணை
வைத்தவ னிடம்பலதுயர்
கெடுத்தலை நினைத்தற மியற்றுதல்
கிளர்ந்துபுல வாணர்வறுமை
விடுத்தலை மதித்துநிதி நல்குமவர்
மல்குபதி வேதவனமே. 8 |
வளைத்து அழகிய உலகில்
ஒழித்த தேவதேவனாம், முழுமுதற் கடவுளான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, முள் முருக்கம் பூவையொத்த
உதடுகளால், கனிபோன்று இனிய மொழிகளைப் பேசும் சிவந்த
வாயையுடைய பெண்கள் பாட, வியக்கும் மனத்தையுடைய இயக்கர்களும்,
முனிவர் கூட்டங்களும் நிறைந்து போற்ற விளங்கும் திருவேதவனம் என்னும்
திருத்தலமாகும்.
கு-ரை:
வஞ்சக மனத்து - வஞ்சகம் பொருந்திய மனத்தையுடைய.
அவுணர் - அசுரர்களின். வல் அரணம் - வலிய (மூன்று) மதில்களையும்.
அம் சகம் - அழகிய உலகில். அவித்த - ஒழித்த, அமரர்க்கு அமரன் -
தேவதேவனாகிய. ஆதி பெருமானது - முழுமுதற்கடவுளாகிய
சிவபெருமானது. இடம் ஆம். கிஞ்சுக இதழ் - முள் முருக்கம் பூவையொத்த
உதடுகளில். கனிகள் ஊறிய - இனிமையின் ஊற்றென்னும் படியான
(சொற்களைப் பேசும்). செவ்வாயவர் - சிவந்த வாயையுடைய பெண்கள்.
பாடல் பயில - பாட. விஞ்சு சுகம் - (வியப்பு) மிக்க மனத்தையுடைய.
இயக்கர் - இயக்ஷர்களும். முனிவக்கணம்(துறந்த) முனிவர்கூட்டமும்.
(அப்பாடலைக் கேட்க) நிறைந்துமிடை - நிறைந்து நெருங்குகின்ற.
(வேதவனமே) முனிவர்+கணம் - முனிவக்கணம் என்றாயிற்று. வாணயித்
தெரு. என்ற தொடரிற்போல, சிலவிகாரமாம் உயர்திணை என்ற நன்னூல்
விதிப்படி.
8.
பொ-ரை: கிரீடம் அணிந்த பத்துத் தலைகளையுடையனாய்,
முரட்டுத் தன்மையுடைய அரக்கனான இராவணனைத் தன் காற்பெருவிரலை
ஊன்றி மலையின்கீழ் நெருக்கிப் பின் அவனுக்குக் கருணைபுரிந்தருளிய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், பலவிதத் துன்பங்களும் கெடும்படி
அறம் இயற்றும் முயற்சியுடையவர்களாய், புலவர்களின் வறுமையை நீக்கக்
கருதித் திரவியங்களைக் கொடுக்கும் கொடையாளிகள் நிறைந்த
திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
|