3622. |
வாசமலர்
மேவியுறை வானுநெடு |
|
மாலுமறி
யாதநெறியைக்
கூசுதல்செ யாதவம ணாதரொடு
தேரர்குறு காதவரனூர்
காசுமணி வார்கனக நீடுகட
லோடுதிரை வார்துவலைமேல்
வீசுவலை வாணரவை வாரிவிலை
பேசுமெழில் வேதவனமே. 9 |
கு-ரை:
முடி - கிரீடம். (தலைகள் பத்து உடைய) முருடு உரு -
முரட்டுத் தன்மைகாட்டும் உருவையுடைய (அரக்கனை விரலால், நெருக்கி
அடித்து). முன் - அக்காலத்தில், அடித்தலம் - பாதாளத்தில். வைத்து -
இருத்தி. அலமர - கலங்கும்படி. கருணை வைத்தவன் - மறக்கருணை
புரிந்தருளிய சிவபெருமானது. இடம் - வாழும் இடம் (யாதெனில்) பல துயர்
- (அதனால் விளையும் பலவித துன்பங்களையும். கெடுத்தலை நினைத்து
அறம் இயற்றுதலில்) கிளர்ந்து - முயற்சியுடையவர்களாய். புலவாணர் -
புலமையால் வாழ்பவர்களாகிய புலவர்களினின்றும். வறுமை - வறுமையை.
விடுத்தலை மதித்து - நீக்குதலை அழுத்தமாகக் கருதி. நிதி - திரவியங்களை.
நல்குமவர் - கொடுக்கும் கொடையாளிகள். மல்குபதி - நிறைந்த தலமாம்.
9.
பொ-ரை: நறுமணம் கமழும் தாமரை மலரில் வீற்றிருக்கும்
பிரமனும், திருமாலும் அறியாத சிவன் பெருமையைப் பழிப்பதற்குக் கூசாத
பயனிலிகளாகிய சமணர்களுடன், பௌத்தர்களும் அடையாத சிவபெருமான்
வீற்றிருக்கும் தலமாவது செம்படவர்கள் பெரிய கடலலைகள் ஓடிவரும்
போது வலையை வீசி, அவை கொணர்கின்ற இரத்தினங்களையும்,
மணிகளையும் சிறந்த பொன்னையும் வாரி விலைபேசும் அழகிய
திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
மலர் மேவி உறைவானும் - தாமரை மலரில் தங்கி
வசிப்பவனாகிய பிரமனும். நெடுமாலும் - திருமாலும். அறியாத -
அறியாததாகிய. நெறி - சிவன் பெருமையை. கூசுதல் செயாத -
பழிப்பதற்குக் கூசாத, அமண் ஆதரோடு - பயனிலிகளாகிய சமணர்களுடன்.
தேரர் - பௌத்தர்களும். குறுகாத - அடையாத. அரன் - அச்
சிவபெருமானது. (ஊர்) நீடு - நெடிய. கடல் - கடலில். ஓடு - ஓடிவருகின்ற.
திரை - அலைகள். வார் - சொரிகின்ற.
|