பக்கம் எண் :

968திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3630. எண் பெரிய வானவர்க ணின்றுதுதி
       செய்யவிறை யேகருணையாய்
உண்பரிய நஞ்சுதனை யுண்டுலக
     முய்யவரு ளுத்தமனிடம்
பண்பயிலும் வண்டுபல கெண்டிமது
     வுண்டுநிறை பைம் பொழிலின்வாய்
ஒண்பலவி னின்கனி சொரிந்துமண
     நாறுதவி மாணிகுழியே.                7


கொண்டு - தடாகங்களிற் பூத்த சிறந்த மலர்களையும் கொணர்ந்து. கெடிலம்
உந்துபுனல் - திருக்கெடில நதியின் மோதும் தண்ணீர். வயல்பாயும் -
வயலிற் பாய்வதனால் எய்திய. மணம்ஆர் - வாசனை பரவுகின்ற
(உதவிமாணிகுழி).

     7. பொ-ரை: எண்ணற்ற தேவர்கள் வணங்கிநின்று துதிசெய்யப்
பேரருளுடையவனாய் எவரும் உண்ணுதற்கரிய நஞ்சை உண்டு உலகம்
உய்யும்படி அருள்செய்த உத்தமனான சிவபெருமான் வீற்றிருந்தருளும்
தலமாவது, பண்ணிசை பாடுகின்ற வண்டுகள், பல மலர்களையும் கிளறி,
தேனருந்த, வளம்மிக்க பசுமை வாய்ந்த சோலைகளிடத்துச் சிறந்த
பலாமரங்களின் இனிய கனிகளிலிருந்து தேனைச் சொரிந்து நறுமணம்
கமழ்கின்ற திருமாணிகுழி என்பதாகும்.

     கு-ரை: எண் பெரிய - மிக்க செருக்கையுடைய. வானவர்கள் -
தேவர்கள் (நின்று துதிசெய்ய.) இறையே - சற்று. கருணை ஆய் - கிருபை
உடையவராகி. உண்பு அரிய - எவரும் உண்ணுதற்கு அரிய. (நஞ்சுதனை
உண்டு). உலகு உய்ய அருள் உத்தமனிடம் - உலகம் உய்யும்படி அருள்
புரிந்த உத்தமனாகிய சிவபெருமானது இடமாவது. பண்பயிலும் - இசையைப்
பாடிக்கொண்டிருக்கும் (வண்டு). பல - பல மலர்களையும். கெண்டி - கிளறி.
மது உண்டு - தேனைக் குடிக்க. நிறை - வளம் நிறைந்த. பைம் பொழிலின்
வாய் - பசிய சோலையினிடத்து. ஒண்பலவின் - சிறந்த பலா மரங்களின்.
இன்கனி - இனிய கனிகள்.