பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)77. திருமாணிகுழி967

3629. மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு
       மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை
     செய்தமணி கண்டனிடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட
     மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண
     மாருதவி மாணிகுழியே.               6


     கு-ரை: மாசுஇல்மதி - குற்றமில்லாத சந்திரனை. சூடு - அணிந்த.
சடைமுடியர் - பெரிய சடாமுடியையுடையவர். வல் அசுரர் - வலிய
அசுரர்களின். தொல்நகரம் - பழைய திரிபுரங்களை. முன் - அக்காலத்தில்.
நாசம் (அது) செய்து - அழித்து. (நல்வானவர்களுக்கு அருள் செய்). நம்பன்
இடமாம் - சிவபெருமானின் இடமாம். வாசமலி - மணம் மிகுந்த. மென்குழல்
மடந்தையர்கள் - மெல்லிய கூந்தலையுடைய மாதர்கள், மாளிகையின் மன்னி
- மாளிகைகளில் தங்கி, அழகுஆர் - அழகு பொருந்திய. ஊசல்மிசை ஏறி -
ஊசலின்மேல் (ஏறி உகைத்து). இனிதாக இசைபாடு - இனிமையுடையதாக
ஊசற்பாட்டைப் பாடி (ஆடுகின்ற உதவிமாணி குழியே).

     6. பொ-ரை: மலரும் நிலையிலுள்ள மலர்களைக் கொண்டு சிவ
வழிபாடு செய்த பிரமசாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரும்
மனத்தோடு வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த
நீலகண்டனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், சந்தன மரங்கள்,
கரிய அகிற் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து விழுந்து,
குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தள்ளிக் கொண்டு வரும்
கெடிலநதியின் நீர் வயல்களில் பாய நறுமணம் கமழும் திருமாணிகுழி
ஆகும்.

     கு-ரை: மந்தமலர்கொண்டு - நன்கு மலராத மலர்களைக் கொண்ட.
வழிபாடு செய்யும் - பூசனைபுரிந்த. மாணி - மார்க்கண்டேயரின். உயிர்வவ்வ
மனமாய் - உயிரைக் கவரும் கருத்தோடு (வந்த ஒரு காலன் உயிர் மாள)
உதைசெய்த - உதைத்த. மணிகண்டன் - நீலகண்டனாகிய சிவ பெருமானின்
(இடம் ஆம்). சந்தினோடு - சந்தனமரங்களோடு. கார் அகில் - கரிய அகிற்
கட்டைகளையும் (சுமந்து மலையினின்றும் இறங்கி) தடம் மாமலர்கள்