|
மட்டைமலி
தாழையிள நீர்முதிய
வாழையில் விழுந்தவதரில்
ஒட்டமலி பூகநிரை தாறுதிர
வேறுதவி மாணிகுழியே. 10 |
3634. |
உந்திவரு
தண்கெடில மோடுபுனல் |
|
சூழுதவி
மாணிகுழிமேல்
அந்திமதி சூடியவெம் மானையடி
சேருமணி காழிநகரான்
சந்தநிறை தண்டமிழ் தெரிந்துணரும்
ஞானசம் பந்தனதுசொல்
முந்தியிசை செய்துமொழி வார்களுடை
யார்கணெடு வானநிலனே. 11 |
திருச்சிற்றம்பலம்
முட்டைபோல் தமக்கென
ஓர் உறுதி இல்லாத, அவர்கள் சொன்ன
சொற்களால் அவர்கட்கு அருள்புரியாத சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது, மட்டைகளையுடைய தென்னைகளின் இளநீர்கள் வாழையிலும்,
பாக்கு மரங்களிலும் விழுந்து குலைகள் சிதற விளங்கும் திருமாணிகுழி
ஆகும்.
கு-ரை:
மொட்டை - மொட்டைத் தலையையுடைய. அமண் ஆதர்
- சமணர்களாகிய அறிவிலிகளும். முது தேரர் - பேதைமையின் முதிர்ந்த
புத்தர்களுமாகிய, மதி இல்லிகள் - புத்தியற்றவர்களும், முயன்றன படும் -
முயன்று செய்த வினைகளே பயன்தரும் (அதற்குக் கர்த்தா வேண்டா
என்று சொல்லும்) முட்டைகள் - உருட்டிய வழி உருளும் முட்டைபோல்
தமக்கென ஓர் உறுதி இல்லாத அவர்கள். மொழிந்த மொழி கொண்டு -
சொன்ன சொற்களால், அருள் செய்யாத - அருள் புரியாத (முதல்வன்றனிடமாம்,) மட்டை
மலி தாழை - மட்டைகளையுடைய
தென்னைகளின். இளநீர் - இளநீர்கள். முதிய வாழையில் - முதிர்ந்த
வாழையில். விழுந்த அதரில் - விழுந்த வழியே. ஒட்டமலி - வரிசையாக
உள்ள: பூகநிரை - கமுகின் சோலைகளின். தாறு உதிர - குலைகளில் உள்ள
காய்கள் உதிரும் படியாக, ஏறு - எற்றித்தாக்கும் (உதவிமாணிகுழியே.)
11.
பொ-ரை: பல பொருள்களை நீர்ப்பெருக்குடன் அடித்து வரும்
கெடிலநதி சூழ்ந்த உதவிமாணிகுழியின் மீது, மாலைக்காலப்
|