|  பிறைச்சந்திரனைச் 
        சூடிய எம் தலைவனான சிவபெருமானின் திருவடிகளை இடைவிடாது தியானிக்கும் அழகிய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன்
 சந்தம் நிறைந்த இன்தமிழில் அறிந்துணர்ந்து அருளிய இத்திருப்பதிகத்தை
 இசையுடன் பாட முற்படுபவர்கள் உயர்ந்த முத்திப் பேற்றைப் பெறுவர்.
       கு-ரை: 
        உந்திவரு - பல பொருள்களை அடித்துக்கொண்டு வருகின்ற. தண் - குளிர்ச்சி பொருந்திய, கெடிலம் - கெடில நதியின். ஓடுபுனல் -
 ஓடும் தண்ணீர். சூழ் - சூழ்ந்த. (உதவிமாணி குழிமேல்.) அந்திமதி சூடிய
 எம்மானை - அந்திக்காலத்தில் தோன்றும் பிறைச் சந்திரனை அணிந்த எம்
 தலைவனாகிய சிவபெருமானது. அடி - திருவடிகளை, சேரும் - இடை
 விடாது தியானிக்கும். அணி - அழகிய. காழிநகரான் சீகாழியில்
 அவதரித்தருளியவரும். சந்தம் நிறை - சந்தம் நிறைந்த. தண் தமிழ் -
 இனிய தமிழை. தெரிந்து உணரும் - அறிந்து உணர்ந்த (ஞானசம்பந்தனது.)
 சொல் - சொற்களாகிய இப்பதிகத்தை. முந்தி - முற்பட. இசை செய்து -
 இசையைத் தொடங்கி. மொழிவார்கள் - பாடுவோர். நெடுவான நிலன் -
 எவற்றினும் உயர்ந்ததாகிய முத்தியுலகத்தை, உடையார் - உடைமையாகப்
 பெறுவர்.
 
        
          | திருஞானசம்பந்தர் 
              புராணம் செல்வம் 
              மல்கிய தில்லைமூதூரினில் திருநடம் பணிந்தேத்திப்
 பல்பெ ருந்தொண்டர் எதிர்கொளப்
 பரமர்தந் திருத்தினை நகர்பாடி
 அல்கு தொண்டர்கள் தம்முடன்
 திருமாணி குழியினை அணைந்தேத்தி
 மல்கு வார்சடை யார்திருப்
 பாதிரிப் புலியூரை வந்துற்றார்.
 - 
              சேக்கிழார்
 
 |  |