பதிக
வரலாறு:
"நீடுசண்பை
நிறைபுகழ் வேதியர் வேதவேதியர் வேதிகுடியினில் நாதர்கோயில் அணைந்து போற்றிப்
பணிந்து எழுந்து ஓதிய வேதத்தின் ஓங்கு இசையுடைய எழுதுமா மறையாம் பதிகம் இது."
திருவிராகம்
பண்:
சாதாரி
திருச்சிற்றம்பலம்
3635. |
நீறுவரி
யாடரவொ டாமைமன |
|
வென்புநிரை
பூண்பரிடபம்
ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ
லாதிய ரிருந்தவிடமாம்
தாறுவிரி பூகமலி வாழைவிரை
நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள
மாரும்வயல் வேதிகுடியே. 1 |
1.
பொ - ரை: திருநீற்றினையும், வரிகளையுடைய ஆடும்
பாம்பையும், ஆமையோட்டையும், அக்குமணியையும், எலும்பு மாலையையும்
சிவபெருமான் அணிந்துள்ளார். அவர் இடபவாகனத்தில் ஏறுவார். யாவரும்
வணங்கத்தக்க முதல்வராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்,
பாளைகள் விரிந்த பாக்குமரங்கள் நிறைந்த சோலைகளிலும், பழங்கள்
கனிந்த வாழைத் தோட்டங்களிலும் நறுமணம் வீச, மடுக்களில் ஆணும்,
பெண்ணுமான வாளை மீன்கள் வேறு பிரியாமல் விளையாடும், வயல்
வளமிக்க திருவேதிகுடி ஆகும்.
கு-ரை:
நீறு - திருநீற்றையும். வரி - நெடிய, ஆடு அரவொடு -
ஆடும் பாம்புடனே. ஆமை - ஆமையோட்டையும். மனவு - அக்குப்
பாசியையும். என்புநிரை - எலும்பு மாலையையும். பூண்பர் - அணிவார்.
இடபம் ஏறுவர் - காளையை ஏறிநடத்துவார். யாவரும் -
|