பக்கம் எண் :

974திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3636. சொற்பிரிவி லாதமறை பாடிநட,
       மாடுவர்தொ லானையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவரெந்
     நாளும்வளர் வானவர்தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமு
     னயின்றவ ரியன்றதொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக
     ரென்பர்திரு வேதிகுடியே.              2


எவரும். இறைஞ்சு - வணங்கத்தக்க. கழல் - திருவடிகளையுடைய, ஆதியர்
- முதல்வர் ஆகிய சிவபெருமான் (இருந்த இடம் ஆம்.) தாறு விரி -
பாளைகள் விரிந்த. பூகம் - கமுகஞ்சோலைகளிலும், (பழங்கள் கனிந்த)
மலிவாழை - அடர்ந்த வாழைத் தோட்டங்களிலும், விரை நாற - வாசனை
வீசவும். மடுவில் - மடுக்களில். இணைவாளை - ஆணும் பெண்ணுமாக
வாளைமீன் இணைகள். வேறு பிரியாது விளையாட - வேறாகப் பிரியாமல்
விளையாடவும். வயல் வளம் ஆரும் - வயல்களில் வளங்கள் மிகுந்தும்
உள்ள. வேதிகுடி - திருவேதி குடியே. ஆமை என்ற சொல், ஆமை
யோட்டைக் குறிப்பது முதலாகு பெயர். மனவு - அக்குப்பாசி, வேட்டுவக்
கோலம் தாங்கிய பொழுது அணிந்தது. நிறை - வரிசை; இங்கு மாலையைக்
குறித்தது. அயன் அரி முதலிய தேவர்கள் செருக்குறா வண்ணம் பலவூழிகளிலும் இறந்த அவர்தம் எலும்பை மாலையாக அணிந்தவர்.
(கந்தபுராணம் ததீசியுத்தரப் படலம் - 12) காண்க. ஏறுவர் + யாவரும் =
ஏறுவரி யாவரும். விரைநாற என்பதற்கேற்பப் 'பழங்கள் கனிந்த' என
அடை வருவித்துரைக்கப்பட்டது.

     2. பொ-ரை: சிவபெருமான் இசையும், சொல்லின் மெய்ப்பொருளும்
பிரிதல் இல்லாத வேதத்தைப்பாடி நடனம் ஆடுவர். முதிர்ந்த யானையின்
தோலை உரித்து மல்யுத்தம் புரியவல்ல தோளில் இனிதாக அணிவார்.
நாள்தோறும் தேவர்கள் வணங்க, உண்ணுதற்கரிய நஞ்சை அமுதமாக
முற்காலத்தில் உண்டருளியவர். பலவாற்றானும் புகழ்மிக்க மலையரையன்
மகளாகிய உமாதேவியாரை ஒருபாகமாகக் கொண்டருளிய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி என்பதாம்.

     கு-ரை: சொல் பிரிவு இலாத - இசையோடு சொற்பிரியாத. மறை -
வேத கானத்தை. பாடி - பாடிக்கொண்டு. நடம் ஆடுவர் -