|
பாசம
தறுத்தவனி யிற்பெயர்கள்
பத்துடைய மன்னனவனைக்
கூசவகை கண்டுபி னவற்கருள்க
ணல்கவல கோகரணமே. 10 |
3656.
|
கோடலர
வீனும்விரி சாரன்மு
னெருங்கிவளர் கோகரணமே
ஈடமினி தாகவுறை வானடிகள்
பேணியணி காழிநகரான்
நாடிய தமிழ்க்கிளவி யின்னிசைசெய்
ஞானசம் பந்தன்மொழிகள்
பாடவல பத்தரவ ரெத்திசையு
மாள்வர்பர லோகமெளிதே 11 |
திருச்சிற்றம்பலம்
இவ்வரிய பூவுலகில்
பத்துப்பெயர்களையுடைய அர்ச்சுனனின் பாசத்தைப்
போக்கி, அவன் நாணும்படி போர்செய்து பின் அருள் புரிந்த
திருக்கோகரணம் ஆகும்.
கு-ரை:நேசம்
இல் - உள்ளன்பில்லாத. மனத்து அமணர் -
மனத்தையுடைய சமணர்களும், தேரர்கள் - புத்தர்களும், நிரந்த மொழி -
ஒழுங்குடையதுபோற்கூறும் சொற்கள். பொய்ச்சொற்களாம். அகல்வித்து -
நீக்கி. ஆசைகொள் மனத்து - தன்னிடத்தில் ஆசை கொள்ளும்படியான
மனத்தையுடைய, அடியாரவர் தமக்கு அருளும், அங்கணன் சிவபெருமானது
இடம், அவனியில் - பூமியில். பெயர்கள் பத்துடைய அரசனான
அர்ச்சுனனைப் பாசமது அறுத்து, கூச - நாண வகைகண்டுபின். அவற்கு.
அருள்கள் நல்க வல - அவருக்கு வரங்கள் கொடுக்க வல்லதாகிய
கோகரணம்.
11.
பொ-ரை: காந்தட்செடிகள் பாம்புபோல் மலர்கின்ற அகன்ற
மலைச்சாரலையுடைய வளம்பெருகும் திருக்கோகரணத்தை இடமாகக்
கொண்டு இனிது வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி,
ஆராய்ந்து தமிழ்ச்சொற்களால் சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன்
அருளிய இனிய இசைப்பாடல்களைப் பாடவல்ல பக்தர்கள் அரசராகிய
எல்லாத் திசையும் ஆள்வர். பின் சிவலோகமும் எளிதில் அடைவர்.
|