1070. | மேலு மறிந்தில னான்முகன் மேற்சென்று | | கீழிடந்து | | மாலு மறிந்திலன் மாலுற்ற தேவழி | | பாடுசெய்யும் | | பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி | | மறிந்தசிந்தைக் | | கால னறிந்தா னறிதற் கரியான் | | கழலடியே. | | 11 |
திருச்சிற்றம்பலம்
இமையாத முக்கண்களை உடைய பொன் மயமான நெடிய குன்றம் ஒன்று உள்ளது ஆதலின் அடியவர்கள் வருந்த வேண்டிய தேவை இல்லை. கு-ரை: கல் - மலை. நெடுங்காலம் - நீண்டகாலம். வெதும்பி - வெயிலால், பசுமையற்று வெய்துற்று. கருங்கடல் - நீர்நிறைவாற் கரிய தோற்றத்தையுடைய கடல். நீர்சுருங்கி - நீர் முழுதும் குறைந்து; வற்றி, பல்நெடுங்காலம் - நெடிய பலகாலம். மழைதான் மறுக்கினும் - முகில் மழையைப்பெய்ய மறுத்தாலும். பஞ்சம் - கறுப்பு; வற்கடம். உண்டு . உளது. என்று - என்று சொல்லி. அஞ்சல் - அஞ்சாதே. என்னொடும் சூளறும் நெஞ்சே - என்னுடன் வஞ்சினம் செய்யும் மனமே. இப் புகல் இடத்தே - எல்லா வுயிர்க்கும் புகலிடமான சிவபூமியிலே. பொன்னெடுங் குன்றம் ஒன்று உளது - பொன்னுருவான நெடிய மலை ஒன்றிருக்கின்றது. அதனால், அஞ்சல் நெஞ்சே - பஞ்சம் வரும் என்ற பயமே வேண்டா. ‘பற்றாய் நினைந்திடப் போதுநெஞ்சே’ (தி.4 ப.94 பா.2) என்றும் ‘வானந்துளங்கில் என் (தி.4 ப.112 பா.8.) என்றும் ‘மண் பாதலம்புக்கும் மால்கடல் மூடி’ (தி.4 ப.94 பா.9.) என்றும் தொடங்குந் திருவிருத்தங்களை ஈண்டெண்ணுக. சூளறுதல் சூளுறுதல் இரண்டும் ஒரு பொருளில் ஆளப்படுகின்றன. (கந்தபுராணம் அசமுகி. 29; துணைவரு. 10; கிரவுஞ்ச. 10; சேதுபுராணம். விதூமச் 8; 84; கந்தமாதன. 89; கம்பர். நிகும்ப. 82; பரிபாடல் 8; 70; கலித்தொகை. 41; இறையனாரகப். பக்கம் 18. 107. உரை; மணிமேகலை. 3:- 102. தொல்காப்பியம். பொ. 147. உரை.) 11. பொ-ரை: பிரமன் மேலே அன்ன வடிவிற் சென்று பெருமானுடைய முடியை அறிந்தான் அல்லன். கீழே தோண்டிச் சென்று திரு
|