தருமசேனராதல்: அக்காலத்தில் சமணம் மேலோங்கியிருந்தது. சமண முனிவர்கள் பாடலிபுத்திரம் போன்ற பகுதிகளில்தங்கித் தம் மதம் பரப்பிவந்தனர். பள்ளிகளும் பாழிகளும் அமைத்துக் கொண்டு பல்லவமன்னன் மகேந்திரவர்மன் ஆதரவில் சமண சமயத்தினைப் பரவச் செய்யும் முயற்சியில்ஈடுபட்டிருந்தனர். மருணீக்கியார் பாடலிபுத்திரம் வந்தார். சமணரின் பள்ளியைச் சார்ந்தார். சமண முனிவரும் தங்கள் தர்க்கவாதத் திறமையால் தங்கள் சமயமே மெய்ச்சமயம் என்று கூறி அவர் அறிவைமருட்டித் தங்கள் மதத்தில் ஈடுபடுத்தினர். மருள் நீக்கியாரும் அம்மத நூல்களில் வல்லவரானார். அதுகண்ட சமணரும்‘தருமசேனர்’ என்னும் சிறப்புப் பெயர் அளித்து அவரைப் பாராட்டினர். தருமசேனராகிய மருணீக்கியாரும் புத்தருள் தேரரை வாதில் வென்று சமண் சமயத் தலைவராய் விளங்கிவந்தார். சூலை மடுத்து ஆட்கொள்ளல்: மனையில் இருந்து தவம்பெருக்கிவந்த திலகவதியார், தம்பி புறச்சமயம் சார்ந்த செய்திகேட்டு மனம் புழுங்கினார். சுற்றத் தொடர்புவிட்டுத் தூயசிவ நன்னெறி சார்ந்து பெருமான் திருவருள் பெறவிரும்பித் திருவதிகைவிரட்டானம் அடைந்து சிவசின்னம் அணிந்து திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், மாலை புனைதல் முதலான திருப்பணிகளை மேற்கொண்டு இறைவன் திருவருளைப் போற்றிவந்தார். தீவினைத் தொடர்பால் தம்பி, புறச்சமயம் சார்ந்ததை எண்ணி வருந்தி அதிகைப் பெருமான் திருமுன் நின்று ‘என்னை ஆண்டருளினீராகில் அடியேன் பின்வந்தவனைப் புறச்சமயப்படுகுழியினின்றும் எடுத்தாளவேண்டும்’ என்று விண்ணப்பம் செய்து வந்தார். பெருமான் திலகவதியார் கனவில் தோன்றி‘ உன்னுடைய மனக்கவலையை ஒழி. உன்தம்பி முன்னமே முனியாகி எனை அடையத் தவம் முயன்றவன். அவனை சூலைநோய் தந்து ஆட்கொள்வோம்’ என்று அருள்செய்து மறைந்தனன். அவ்வண்ணமே சூலை நோய் தருமசேனர் வயிற்றிடைச் சென்று பற்றியது. மருணீக்கியாரைப் பற்றிய சூலை வடவைத்தீயும், வச்சிரப்படையும். நஞ்சும் கூடி வருத்தினாற்போலத் துன்பந்தந்தது. தருமசேனர் நடுங்கித் தனியறை ஒன்றில் மயங்கி விழுந்தார். சமண் சமயத்தில் தாம் கற்ற மந்திரங்களால் அந்நோயைத் தடுக்கமுயன்றும் அந்நோய் தணியாது மேலும் மேலும் முடுகிவருத்தியது. தரும சேனரின் துயர்கண்ட சமணர் நெஞ்சழிந்தனர். குண்டிகை நீரை
|