பக்கம் எண் :

59
 

பெறுகின்றது. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரங்கள் எளிமையுடன் பொருட்பொலிவும் பொருளாழமுமுடையவை. இவற்றுக்குப் பொருள் காணுதல் மிகுந்த சிரமமான காரியம்.

தேவாரங்களைப் பொருளுடன் வெளியிடுதல் இதுவரை செய்யாத வேலை. தருமை ஆதீனத்தில் இதனை மேற்கொண்டது சைவ உலகத்திற்கும் தமிழுலகிற்கும் பேருபகாரமான காரியம்.

திருமுறைகளுக்குப் பொருள் காணுதல் எளிதன்று. இலக்கண இலக்கியப் பயிற்சிமட்டும் போதாது. சைவத்திருமுறைகளிலும் மெய்கண்ட சாத்திரங்களிலும் நல்ல பயிற்சி வேண்டும். சித்தாந்த சாத்திரங்களைப் பரம்பரையிலிருந்து பயின்றிருக்கவேண்டும். சிவதீக்கையும் சிவபூசையும் இடைவிடாத சிவசிந்தனையும் வேண்டும். உலக அனுபவமும் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாய்த் திருவருளில் நம்பிக்கையும் தற்போத மேலிடாமையும் வேண்டும்.

இத்துணையும் பொருந்தப்பெற்றவர் வித்துவான் சித்தாந்த ரத்நாகரம் ஆசிரியர்,திரு. முத்து. சு. மாணிக்கவாசக முதலியார் அவர்களாவர். இவ் வெளியீட்டுப் பணியை ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் அவர்கள் அவர்பால் ஒப்படைத்தது சிறந்த தகுந்த செயலாகும்.“இதனை இதனாலிவன் முடிக்குமென்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்” என்றார் திருவள்ளுவ நாயனார்.

இவ்வுரை வெறும் குறிப்புரை மட்டுமன்றிப் பல இடங்களில் விரிவுரையாகவே விளங்குகின்றது.

திருமுறைகளில் இருந்தே பெரும்பாலும் மேற்கோள்கள் தரப்படுகின்றன. “வேதத்திற்குப் பிரமாணம் வேதமே” என்பர் திரு.க. சதாசிவசெட்டியார் அவர்கள்.

பதிக வரலாறு பெரியபுராணத்தை ஒட்டி எழுதப்பட்டு இருக்கிறது. பதிக வரலாறு பதிக விளக்கத்துக்குப் பொருந்துவன செய்வது.

தேவையான இடங்களில் இலக்கணக் குறிப்புக்கள் தரப்பட்டுள்ளன. புராண சரிதங்களும் விளக்கப்பட்டுள்ளன.

பெரியபுராணச் செய்யுட்கள் ஆங்காங்குத்தரப்பட்டது