பக்கம் எண் :

67
 

பேரிடர் விளைத்தது. கடைக்கணிற்கின்றேன் என்றிருந்து பிழைபட்டதோ எனக் கருதினேன்.

பிழை கணித்தல் நம் அப்பர் பழக்கத்தில் இருந்த ஒன்று என்பது, ‘அரிதின் திறக்க.....திருமடத்தில் ஒருபால் அணைந்து பேழ்கணித்து மருவும் உணர்வில் துயில் கொண்டார் வாய்மை திறம்பா வாகீசர்’(தி.12 பெரியபுராணம். அப்பர். 275) என்றதால் விளங்கும். பிழை (பேழ்) கணித்தலும் கறைக்கணித்தலும் ஒரு பொருளன.

“பிறைக்கணிச்சடை யெம்பெரு மானென்று

கறைக்கணித்தவர் கண்ட வணக்கத்தாய்

உறக்கணித்துரு காமனத் தார்களைப்

புறக்கணித்திடும் புத்தூர்ப் புனிதரே.”

(தி.5 ப.16 பா.2)

என்ற திருப்பாடலால், அது ‘கறைக்கணிக்கின்றேன்’ என்றிருந்து பிழைபட்டதோ என்றும் ஐயுறு நின்றது.

இவ்வாறு, குறிப்பெழுதிய பின்னர்த் தோன்றியன எண்ணற்றன. அவற்றுள் மறந்தன பல. மறவாதவற்றைஅடுத்த திருமுறையிற் பொருத்தமுள்ள இடங்களில் எழுதக் குறித்து வைத்துளேன். அறிஞர் இவ்வுரையில் உள்ள குற்றங்களை அறிவிப்பின். அவற்றை எவ்வாற்றாலும் திருத்தி வெளியிடத் தவறேன்.

இந்நாலாந்திருமுறையை நோக்கி, பாராட்டுரை எழுதித் தந்த, சென்னை மாநிலத்தின் அமைச்சர் உயர் திருவாளர். மாண்புமிகு. எம். பக்தவத்சல முதலியார் பி. ஏ., பி. எல்., அவர்களுக்குத் தருமைத் திருமடாலயத்தின் சார்பில் நன்றியும் குருவருளும் உரியன.

‘அணிந்துரை’ அளித்த திருவுடையந்தணர் சம்பந்த சரணாலயர் (கோயம்புத்தூர் சி. கே. எஸ்.) அவர்களுக்கும் அவை உரியனவாகும்.

‘உரையின் மாட்சி’யை எழுதிய என் மாணாக்கர். வித்துவான், திரு. சொ. சிங்காரவேலனார்க்கும், தல வரலாற்றுக் குறிப்புக்களை எழுதிய நண்பர் வித்துவான், திரு. வை. சுந்தரேச வாண்டையார்க்கும், திருப்பயற்றங்குடி வரலாற்றையெழுதியும் வரலாற்றுக் குறிப்புக்களை அச்சுபிழை அறநோக்கியும் உதவிய