பக்கம் எண் :

68
 

துணைவர், வித்துவான், திரு. வி. சா.குருசாமி தேசிகர்க்கும் என் வாழ்த்துக்கள் உரியன.

சென்ற குருபூசைத் திருநாள் மலராய்த் திகழும் இது, குறிப்பும் விளக்கமும் மருவிய உரையுடன். இத் தருமைக் குருமணியின் திருவுள்ளத்துப் பெருங்கருணை வடிவாய், உலகிற்கு வாய்க்கின்றது.

என் குடி முழுதாளும் அக் குருநாதரது அருட்பெருக்கே, என் உள்ளிருந்து தூண்டி எழுதுவித்தது. இது விரிவுரை எழுதவல்லாரைத் தூண்டும். பொருள் அறியாமல், பாராயணம் புரிவோர்க்குச் சிறிதேனும் விளக்கம் உண்டாக்கும். திருவாலவாய்ச் சொக்கேசன் திருவருளும், அவனுருவாய்த் திகழும் குருவருளும், மெய்யன்பும், அடிமைத் திறமும், இருமொழிப் பெரும் புலமையும் உடையவரே திருமுறைக்கு உரையெழுதவல்லார் என்பதை நன்குணர்ந்தும் குருவாணையை மீற அஞ்சியே இவ்வருஞ்செயலில் ஈடுபடலாயிற்று. ஆதலின், உலகம் அடியேன் பிழை பொறுத்துக் கொள்க.

வாழ்க சைவம்!

வளர்க திருமுறையுணர்ச்சி!

அடியார்க்கு அடியன்,

தருமை ஆதீனம்,

முத்து. சு. மாணிக்கவாசகன்,

17-4-1958.

தருமை ஆதீன வித்துவான்.