38. திருவையாறு பதிக வரலாறு: சுவாமிகள் கயிலையாத்திரையின் போது சிவனருளால், பனிவரைப் பொய்கையில் மூழ்கித் திருவையாற்றில் ஓர் வாவி மீது தோன்றி வந்து, உலகெலாம் வியப்ப எழுந்து கரையில் ஏறித் திருவருட் பெருமையையுணர்ந்து, கண்ணீர் வாவியிற் படிந்தெழும்படியராய் எல்லாம் சிவமயமாம் காட்சி பெற்றுத் தரிசனம் புரிந்து, அந்த ஆனந்தக் கடலைக் கண்ணாலும் முகந்துகொண்டு வணங்கிப் பாடியருளிய பலவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம். திருநேரிசை பதிக எண்: 38 திருச்சிற்றம்பலம் | 374. | கங்கையைச் சடையுள் வைத்தார் | | | கதிர்ப்பொறி யரவும் வைத்தார் | | | திங்களைத் திகழ வைத்தார் | | | திசைதிசை தொழவும் வைத்தார் | | | மங்கையைப் பாகம் வைத்தார் | | | மான்மறி மழுவும் வைத்தார் | | | அங்கையு ளனலும் வைத்தார் | | | ஐயனை யாற னாரே. | 1 |
1. பொ-ரை: நம் தலைவனாராகிய ஐயாறனார், சடையில் கங்கையையும் ஒளிவீசும் புள்ளிகளையுடைய பாம்பையும் பிறையையும் விளங்குமாறு வைத்துத் தம்மை எல்லாத் திசையிலுள்ளாரும் தொழுமாறு அமைத்துக்கொண்டு பார்வதி பாகராய், மான்குட்டியையும், மழுப்படையையும், உள்ளங் கையில் வைத்த தீயையும் உடையவராவார். கு-ரை: சடையுள் கங்கையும் பாம்பும் திங்களும் திகழ வைத்தார். எல்லாத் திசையிலும் (எல்லாவுயிர்களும்) தொழ வைத்தார். மங்கையை இடப்பால் வைத்தார். மான் கன்றும் மழுப் படையும் தீயும் திருக்கையில் வைத்தார். ‘மான் மறியும் மாமழுவும் அனலும் ஏந்துங் கையானே’ (தி.6 ப.62 பா.7.) ஐயன் ஐயாறனார்:- ஒருமையும்
|