பக்கம் எண் :

684
 
373.இலையுடைப் படைகை யேந்து

மிலங்கையர் மன்னன் றன்னைத்

தலையுட னடர்த்து மீண்டே

தானவற் கருள்கள் செய்து

சிலையுடன் கணையைச் சேர்த்துத்

திரிபுர மெரியச் செற்ற

நிலையுடை யடிகள் போலு

நின்றநெய்த் தான னாரே.

10

திருச்சிற்றம்பலம்


(தி.5 ப.94 பா.6) என்றதால் இதுவிளங்கும்.

10. பொ-ரை: இலைவடிவமாக அமைந்த வேலினைக் கையில் ஏந்திய இராவணனைத் தலை உட்பட உடல் முழுதையும் நசுக்கிப் பின் மீண்டும் அவனுக்குப் பல அருள்களைக் கொடுத்து, வில்லிலே அம்பினை இணைத்து மும்மதில்களையும் அழியுமாறு வெகுண்ட, என்றும் அழியாத நிலையை உடைய பெருமான் நிலைபெற்ற திருநெய்த்தானத் திருப்பதியை உகந்திருப்பவராவார்.

கு-ரை: இலையுடைப்படை:- ‘ஒளிறு இலை எஃகு’ - ‘விளங்கிய இலையையுடைய வேல்’. (புறம். 26) ‘திருந்திலை நெடுவேல்’-‘திருந்தின இலையையுடைய நெடியவேல்’ (புறம். 180) ‘நச்சிலைவேல்’-‘நஞ்சு தோய்த்த அலகையுடைய வேல்’ (சிந்தாமணி. 2209). அவற்கு - அ(வ் விலங்கையர் தலை) வனுக்கு. தான் (அருள்கள்) செய்து. சிலை - மேருவில். கணை - மால்கணை. நிலை - அழியாத நிலைமை.

திருநாவுக்கரசுசுவாமிகள் புராணம்

நீடிய அப்பதி நின்று நெய்த்தான மேமு தலாக
மாடுயர் தானம் பணிந்து மழபாடி யாரை வணங்கிப்
பாடிய செந்தமிழ் மாலை பகர்ந்து பணிசெய்து போற்றித்
தேடிய மாலுக் கரியார் திருப்பூந் துருத்தியைச் சேர்ந்தார்.

-சேக்கிழார்.